கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் 125 வது ஆண்டு கல்வி சேவையினை 2025ம் ஆண்டு நிறைவு செய்ய உள்ள நிலையில் இந்த வருடம் அக்டோபர் 13-ஆம் தேதி முதல்2025 ஆம் ஆண்டு அக்டோபர் 13ம் திகதி வரையான ஆண்டை ஜூவிலி ஆண்டாக பிரகடனப்படுத்தி பல செயதிட்டங்களை முன்னெடுக்கவுள்ள நிலையில் இன்று அதன் ஆரம்ப நிகழ்வுகள் பாடசாலை வளாகத்தில் ஆரம்பமானது.
பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் ரெஜினோல்ட் தலைமையில் ஆரம்பமான நிகழ்வு கார்மேல் பற்றிமா கல்லூரியின் பெண்கள் பிரிவிலிருந்து அதிதிகள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு ஆண்கள் பகுதிகளில் உள்ள அரங்கில் தேசியக்கொடி மற்றும் பாடசாலை கொடிகள் ஏற்றப்பட்டு ஜூபிலி பாடலும் அறிமுகம் செய்யப்பட்டது.
குறித்த நிகழ்வின் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு ஆண்டகை ஜோசப் பொன்னையா ,சிறப்பு அதிதிகளாக அருட்தந்தை சுஜிவா அஞ்சலோ பத்தரன, அருட் சகோதரி நிலாந்தி, அருட்சகோதரர் கிறிஸ்டி ராஜன்,அருட் சகோதரர் பேர்டம் பேரெரா ஆகியோரும் சிறப்பு அதிதியாக கல்முனை வளைய கல்வி பணிப்பாளர் சஹுதுல் நஜூம் மற்றும் முன்னாள் அதிபர்களான அருட்சகோதரர் ஸ்டீபன் மேத்யூ , அருட்சகோதரர் எஸ். சந்தியாகூ ஆகியோர் கலந்துகொடனர்.
இதன் போது பாடசாலை முன்னாள் ஆசிரியர்கள் அதிபர்கள் மாணவர்கள் பழைய மாணவர் சங்கங்கள் என பலர் கூடி சிறப்பித்திருந்தனர்.
kajaana chandrabose
journalist
(Dip.in.journalism)