எனது மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு அமைவாக 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் ஜனநாயக தேசியக் கூட்டணி என்ற தமிழ் கட்சியில் -தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறேன் என யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
11/10 வெள்ளிக்கிழமை பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்படி தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
15வருடங்களாக எமது மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து வருகிறேன்.
இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைமை மற்றும் நான் போட்டியிட்ட கை சின்னத்தின் நிலைமை உங்களுக்கு புரியும்.
நான் போட்டியிட்ட கை சின்னம் நீதிமன்றத்தில் உள்ளது.கட்சியும் பிளவடைந்துள்ளது.
இந்த கால கட்டத்தில் தான் எனது மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு அமைவாக ஜனநாயக தேசிய கூட்டணி என்ற தமிழ் கட்சியில் தனித்து வெற்றி வேட்பாளராக போட்டியிடுகிறேன்.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.