மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தொடர்பான நடை பவனி ……………………………….

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் மார்பக புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு நடைபவணி இன்று (10)இடம்பெற்றது.

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.ரிஸ்வி அவர்களின் தலைமையின் கீழ் இடம்பெற்ற கிறித்த நடைபவணி நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர். எம் எச .கனி, திருகோணமலை தாய் சேய் நல மருத்துவ அதிகாரி டாக்டர்.ஏ.எச்.சமீம், குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்: ஏ.எம்.அஜித் ,கிண்ணியா நகர சபை செயலாளர். எம்.கே.அனிஸ், கிண்ணியா பதில் வலயக்கல்விப் பணிப்பாளர், கிண்ணியா பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார வைத்திய அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

“உங்கள் ஆரோக்கியம் உங்கள் கைகளில்”எனும் தொனிப்பொருளின் கீழ் குறித்த நடைபவணி இடம்பெற்றது.

Hasfar A Haleem BSW (Hons)