நிந்தவூர் அல்-அஷ்றகில் பல்கலை தெரிவாகிய மாணவர்களுக்கு கௌரவிப்பு!

நிந்தவூர் அல் – அஷ்றக் தேசிய பாடசாலையிலிருந்து 2023 இல் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி இம் முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 50 மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ. அப்துல் கபூர் தலைமையில் (03) மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஒத்துழைப்புடன் உயர் வகுப்பு மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி நிகழ்வில், பிரதம அதிதியாக பாடசாலையின் பழைய மாணவரும் நிந்தவூர் குவாசி நீதிபதியுமான எம்.ஐ. இல்யாஸ் கலந்து கொண்டதோடு, விசேட அதிதிகளாக பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளரும் தென்கிழக்கு பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஐ.எல்.எம்.சாஹிர், பீ.எஸ்.ஐ. ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ.எம். றசீன் ஆகியோரும், என்.டபிள்யூ.சீ யின் கல்வி குழு தவிசாளரும் ஓய்வு பெற்ற சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ. நசீர் அஹமட், விஷன் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் விரிவுரையாளருமான எம்.ஐ.எம். ஹுஸைன், சிறகுகள் அமைப்பின் தலைவர் ஆசிரியர் எம்.எச்.எம். முஸம்மில் நிந்தவூர் பாடசாலை இதர அதிபர்கள், பாசாலை ஆளணியினர், கௌரவிக்கப்பட்ட மாணவர்ககளின் பெற்றோர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் அவர்களுடைய பெற்றோருடன் மேடைக்கு அழைக்கப்பட்டு பதக்கம் அணிவிக்கப்பட்டு, நட்சாத்திப் பத்திரம் வழங்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டதுடன் அனைத்து பாடங்களிலும் “ஏ” சித்தி பெற்ற 08 மாணவர்களுக்கும் அகில இலங்கை ரீதியில் அதி திறமை பெற்ற 06 மாணவர்களுக்கும் பணப்பரிசு வழங்கப்பட்டும் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் இம் மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இம் முறை இப்பாடசாலையிலிருந்து 06 மாணவர்கள் மருத்துவ துறைக்கும், 01மாணவன்
பல்லறுவை மருத்துவ துறைக்கும் தெரிவு செய்யப்பட்டு, சாதனை படைத்துள்ளனர்.
மேலும் 03 மாணவர்கள் பொறியியல் துறைக்கும் 02 மாணவர்கள் சட்ட துறைக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.