சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர்
வித்தியாலயத்தில்
ஆசிரியர் தின நிகழ்வுகள் நேற்று முன்தினம் மிகவும் அழகான முறையில் அதிபர் எம்.எஸ்.எம். ஆரிப் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டன.
காலை நேரத்தில் மாணவர்களால் ஆசிரியர்கள் வரவேற்கப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பாடசலையின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதான நுழைவாயில் ஊடாக
அதிபர்கள், ஆசிரியர்கள்,
சிற்றூழியர்கள் போன்றோர்கள் மாணவர்களால் இரு மருங்கிலும் வரவேற்று, பொல்லடி குழுவினரால் பாடசாலை வளாகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து இனிப்புக்கள் வழங்கப்பட்டு, மைதான நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டு, விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
அதன் பின் காலை ஆகாரங்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பாடசாலை மண்டப
நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டு, பரிசளிப்புகளும்,
ஆசிரிய ஞாபகச் சின்னங்களும் வழங்கப்பட்டு, சிறப்பதிதிகளின்
உரைகளும் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து
பகல் போஷனம் வழங்கப்பட்டு, அதிபர் உரையுடன் ஆசிரியர் தினம் இனிதே நிறைவு
பெற்றது.






