சிறப்பாக நடைபெற்றுவரும் இந்து கலாசார திணைக்களத்தின் தேசிய நவராத்திரிவிழா!

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் சுவாமி விபுலானந்தர் கற்கைகள் நிறுவனமும் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழா காரைதீவு சுவாமி விபுலானந்த மணி மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது..

அங்கு நேற்று (8) செவ்வாய்க்கிழமை மாலை பணிமன்ற உறுப்பினர் த.நடேசலிங்கம் தலைமையில் விழா நடைபெற்றது.

சிறப்புச் சொற்பொழிவாளராக சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணிமன்றத்தின் ஆலோசகரும் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா கலந்து கொண்டு உரையாற்றினார்.

விசேட பூஜையை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி நடாத்தினார். கொலுவுக்கான பூஜையை அறநெறி ஆசிரியைகள் நடாத்தினர்.

பாண்டிருப்பு நாவலர் மற்றும் அட்டப்பள்ளம் சித்தி விநாயகர் அறநெறிபாடசாலை மாணவர்களின்ஓங்காரம்,அஸ்ரோத்திரம்,பஜனை,பூசை நிகழ்வு மற்றும் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றன.

நிகழ்வில் ஆசிரிய ஆலோசகர் எஸ். லக்குணம் கதாப்பிரசங்கி நா.சனாதனன் ஆசிரியர் சி.சிவாகரன் திருமதி வினோ ஜெயராஜி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஏற்பாட்டாளர்களான இந்து சமய கலாசார உத்தியோகத்தர்களான கு.ஜெயராஜி ,ந.பிரதாப்,மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனர்.

மேடையில், கலை நிகழ்ச்சியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\
( வி.ரி.சகாதேவராஜா)