அரச அதிபர் கலந்து கொண்ட பத்திரகாளியம்மன் சக்தி விழா.

நற்பிட்டிமுனை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சக்தி விழாவில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம கலந்து சிறப்பித்தார்.

பக்தி பூர்வமாக ஆண்டு தோறும் இடம் பெற்று வரும் வருடாந்த சக்தி விழாவானது இம்முறையும் ஆலயத்தில் சிறப்பாக முன்னெடுக்கப் பட்டிருந்தது.

ஆலயத்தில் பூசைகள் இடம்பெற்று ஒவ்வொரு நாட்களும் வேறு வேறு வீதிகளுக்கும் கும்பம் வருகை தருவது வழக்கம் .

அதன் அடிப்படையில் நேற்று முன்தினமும் கும்பம் கிராம வீதிகளுக்கு செல்லும் நிகழ்வு இடம்பெற்றது .

ஆலய பரிபாலான சபையின் அழைப்பில் ஆலயத்தின் பூசை நிகழ்விற்கு வருகை வந்திருந்த அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் பூசை நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தார்.