மடு துணுக்காய் விளையாட்டு வீரர்களுக்கு செயற்கை சுட்டிக் பயிற்சி

இம்மாதம் 18-22ம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள தேசிய மட்ட பாடசாலை களுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டியில் பங்கேற்க வுள்ள மன்னார் மடு துணுக்காய் கல்வி வலய மாணவர்களுக்கு விசேட பயிற்சியானது டியகம சர்வதேச விளையாட்டு மைதானத்தில் ம்மாதம் 7 – 11ம் திகதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.

இதில் தேசிய மட்டத்தில் சாதிக்க எதிர்பார்க்கப்படும் 25 வீர வீராங்கனைகளும் அவர்களின் 25 பயிற்றுவிப்பாளர்களும் இவ் பயிற்சியில் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.

இந்த மாணவர்களுக்கு வேண்டிய சிந்தடிக் சுவட்டு பயிற்சி மற்றும் மேலதிக உடல் உள வலுவூட்டல் பயிற்சி நுட்பமான முறையில் அணுகல் போன்றவை பயிற்றுவிக்கப்படுகிறதுஇ

இச்செயற்றிட்டத்தை சமூக சேவையாளரும் நலன் விரும்பி யுமான உயர்திரு ‘எமில்காந்தன்’ என்பவர் தானாக முன்வந்து  எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் விளையாட்டு துறையை வளர்க்கும் உன்னத நோக்குடன்  தனது சொந்த பணத்தை செலவு செய்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எமில்காந்தன் அவர்களை கல்வி வலயங்களின் விளையாட்டு துறை சார்பில் மனமார்ந்த நன்றி களையும் வாழ்த்துக்களை யும் தெரிவிப்பதுடன் இவரது பணி எம் மத்தியில் தொடர ஆசித்து நிற்கின்றனர்.

(வாஸ் கூஞ்ஞ)