லிந்துலை சுகாதார அதிகாரி ஏற்பாட்டில் மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி மற்றும் அது தொடர்பிலான விழிப்புணர்வு வீதி நாடகமும் நேற்று (7) லிந்துலை நகரில் நடைபெற்றது.
மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி லிந்துலை சுகாதார அதிகாரி வைத்தியர் ரெய்ஷினி தலைமையில் இடம்பெற்ற விழிப்புணர்வு நடைபவனியும் விழிப்புணர்வு நாடகமும் லிந்துலை நகரில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு நுவரெலியா அட்டன் பிரதான வீதி வழியே 1 கிலோமீற்றர் தூரம் சென்று லிந்துலை நகரை வந்தடைந்தது.லிந்துலை சுகாதார பணிமனை மற்றும் சுகாதார துறை சார்ந்த அதிகாரிகள், உத்தியோகத்தர்கள்,மற்றும் பொதுமக்களும் கலந்துக் கொண்டனர். இதன்போது விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டதுடன், மார்பகப் புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வு தகவல்களும் வழங்கப்பட்டன.