திருகோணமலையில் NAITA கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

திருகோணமலையில் அமைந்துள்ள நைட்டா (NAITA) நிறுவனத்தின் கற்கைநெறிகளை பூர்த்தி செய்த 200 பேருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (04) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நீங்கள் பெற்றுள்ள பெறுமதிமிக்க சான்றிதழைப் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளுங்கள். நாட்டுக்கு பெறுமதியான சேவையை வழங்க உங்களை அர்ப்பணிக்கவும் என இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நைட்டா வின் பணிப்பாளர் பிரியந்த டி சில்வா, மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் நைட்டா நிறுவனத்தின் கற்கைநெறிகளை பூர்த்தி செய்தவர்களும் கலந்து கொண்டனர்.
எப்.முபாரக்