விவசாய நவீன மயமாக்கல் திட்டம் தொடர்பான மீளாய்வு கலந்துரையாடல்

மட்டக்களப்பில் நவின மயமாக்கல் திட்டம் தொடர்பான மீளாய்வு கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (04) இடம் பெற்றது.

விவசாய நவின மயமாக்கல் திட்டத்தின் மூலம் விவசாயிகளை வலுப்படுத்துவதற்கான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் மாதுளை, நிலக்கடலை, வாழை, வெள்ளரிக்காய் (பிப்பிஞ்ஞா) போன்ற பயிரினங்கள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வெள்ளரிக்காய் பயிர்ச்செய்கையானது விவசாயிகள் மத்தியில் தொடர்ச்சியாக மேற்கொள்ள முடியாது போயுள்தை அவதானிக்க முடிகின்றது.

இக் கலந்துரையாடலின் போது பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக விவசாய பணிப்பாளர் எம். எஃ .ஏ.சனிர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு