சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சமுர்த்தி அபிவிருத்தி பிரிவின் முதியோர்களுக்கான சிந்தனை அணுகுமுறை வேலைத்திட்டத்தின் கீழ் முதியோர்களை கௌரவிப்போம் எனும் தொனிப்பொருளில் முதியோர் தின நிகழ்வு (03) உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிரேக்ஷ்ட பிரஜைகள் 50 பேர் கலந்து கொண்டதுடன் அவர்களை மகிழ்விப்பதற்கான ஆடல், பாடல், நாடகங்கள் போன்ற கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், சமூக சேவை உத்தியோகத்தர், சமூகப் பராமரிப்பு நிலைய உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு