வறுமைக் கோட்டின் கீழ் வாழும் வீடற்ற குடும்பம் ஒன்றுக்கு புதிய வீடு

திருகோணமலை,தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவின் கல்மெடியா வடக்கு கிராம சேவகர் பிரிவில் புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு (02)இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வானது சமுர்த்தி திட்டத்தின் விசேட வீடமைப்பு ஊடாக நடை முறைப்படுத்தப்பட்டது .வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பம் ஒன்றிற்கே இவ்வாறு சுமார் ரூபா 750000.00 பெறுமதியான புதிய வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் வைபவம் இடம் பெற்றது.

இதில் தம்பலகாமம் பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக்,மாவட்ட செயலக விடய முகாமையாளர், திட்ட முகாமையாளர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.