எம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற முதியோர்களை கெளரவப்படுத்துவோம்” எனும் தொனிப்பொருளில்
திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் காப்போம் தொண்டு நிறுவனமும் இணைந்து நடாத்திய சர்வதேச முதியோர்தின கொண்டாட்டம் (01) திருகோணமலை புனித ஜோசப் முதியோர் இல்லத்தில் இடம்பெற்றது.
காப்போம் தொண்டு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதீப்கரன் (திலீப்) தலைமையில் இடம்பெற்ற இந்த கொண்டாட்ட விழாவுக்கு பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமிந்த ஹெட்டியராச்சி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் கெளரவ அதிதியாக திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் மற்றும் முதியோர் மேம்பாட்டு அதிகாரி ஏ.எல்.எம்.இர்பான் உள்ளிட்ட அதிகாரிகளும், காப்போம் அமைப்பின் நிர்வாக உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
இந்த கொண்டாட்டத்தின்போது முதியவர்களை மகிழ்விப்பதற்கான பல்வேறுபட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு, இறுதியில் அவர்கள் அனைவருக்கும் புதிய ஆடைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் என்பவற்றை பிரதம அதிதி மற்றும் கெளரவ அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
திருமலை புனித ஜோசப் முதியோர் இல்லத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற
நூற்றுகு மேற்பட்ட முதியோர்களை கெளரவப்படுத்துவதற்கான முழுமையான அனுசரணையை அமலா ஜேம்ஸ்வினால் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அபு அலா