தேசிய மட்ட தைக்வொண்டோ போட்டியில் கல்முனை ஸாஹிரா மாணவன் சுரைப் தங்கம் வென்று சாதனை

இரத்தினபுரி உள்ளக விளையாட்டரங்கில் கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட அகில இலங்கையிலுள்ள பாடசாலைகளுக் கிடையிலான தேசிய மட்ட தைக்வொண்டோ சுற்றுப் போட்டியில் கல்முனை சாஹிராக் கல்லூரி மாணவன் ஜே.ஏ.சுரைப் 20 வயதுக்குற்பட்ட ஆண்களுக்கான (Sparring )நிகழ்ச்சியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இவர் தொடர்ச்சியாக கடந்த 2022, 2023 ஆம் ஆண்டுகளில் இரு முறை தேசிய ரீதியில் வெள்ளிப் பதக்கதினை பெற்று தற்போது 3வது முறையாகவும் தேசியத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022ம் ஆண்டு கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி 14 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கையில் Overall Boys champion ஆக தெரிவு செய்யப்பட்டதோடு 2023 இல் ஒரு வெள்ளி உட்பட 2 வெண்கல பதக்கத்தினையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வெற்றியைப் பெற உதவிகளையும் மாணவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்து ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கிய கல்லூரி முதல்வர் ஜனாப் எம்.ஐ.ஜாபிர் உள்ளிட்ட கல்வி சமூகம் இணைப்பாட விதானத்திற்கு பொறுப்பான உதவி அதிபர் ஏ.எல்.எம். தன்ஸில், அர்ப்பணிப்புடன் தமது திறமைகளை வெளிப்படுத்தி இவ்வெற்றிகளை பெற்ற மாணவர்கள், பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர் (Taekwondo and Karate) பயிற்றுவிப்பாளர் யூ.எல்.எம்.இப்றாஹிம் , உதவி பயிற்றுவிப்பாளர்களான ஏ.பி.ஏ.ஸிஹாப், எம்.எச்.ஏ.ஹஸீன், .ஏ.பி.ஏ.ஹம்தாத், ஜே.ஏ.சுமைத், ஏ.எல்.ஏ.எம்.அப்ரி,ஏ.பி.ஏ.ஹமீம் விளையாட்டு பொறுப்பாசிரியர் எம்.ஐ.எம்.அமீர், உடற்கல்வி பிரிவு ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள், ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
(அஸ்ஹர் இப்றாஹிம்)