சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கான மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்பூட்டல் செயலமர்வு நேற்று முன்தினம் வெற்றிகரமாக இடம்பெற்றது.
புற்றுநோயின் கோரப் பிடியில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும் பொருட்டு நடாத்தப்பட்டு வரும் Cancer Prevention நிகழ்ச்சி நிரலின் தொடரில் பாடசாலை மட்டத்தில் நடாத்திய நிகழ்வு இது.
மேற்படி விழிப்புணர்வு நிகழ்ச்சியை சம்மாந்துறை கல்வி வலய கல்விப் பணிப்பாளர் மற்றும் ஒருங்கிணைப்பு செய்து வழிநடாத்திய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எச். நைரூஸ்கான் (SLEAS) உட்பட, பாடசாலை வளாகத்தில் புற்றுநோய் தொடர்பாக மாணவச் சமூகத்தை விழிப்பூட்டும் பொருட்டு ஏற்பாடுகளை செய்த அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கும் தமது உளப்பூர்வ நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.
( வி.ரி.சகாதேவராஜா)