மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இரத்த தட்டுப்பாட்டினையடுத்து இரத்த தானம் செய்யும் பணிகள் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
செங்கலடி புனித நிக்கொலஸ் ஆலயத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வில் பல பிரமுகர்கள் இரத்த தானம் செய்தனர்.
அருட்தந்தை ஜோசப் நிகஸ்டன் இப்பணியினை ஆரம்பம் செய்தார்
செங்கலடி உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த ஆண்கள் , பெண்கள் குறிப்பாக இளைஞர் யுவதிகள் மிகுந்த ஆர்வத்துடன் முன்வந்து இரத்த தானம் செய்வதை அவதானிக்க முடிந்தது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் டாக்டர்கள் தாதியர்கள் மற்றும் ஊழியர்களும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்த ஆலயத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் இரத்தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
துற்பேகாது எட்டாவது தடவையாக இங்கு இரத்த தான நிகழ்வு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(ஏறாவூர் நிருபர்) 773626236