விசேட தேவையுடைய மாணவர்களை உள்ளடக்கிய சிறுவர் தின நிகழ்வு!

விசேட தேவையுடைய மாணவர்களை உள்ளடக்கிய மட்டக்களப்பு- ஏறாவூர் – ஐயங்கேணி ஹிஸ்புழ்ழாஹ் பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச சிறுவர் தின விழா விமரிசையாக நடைபெற்றது.

பிரபல சமூகசேவை நிறுவனமான SWDO அமைப்பு இதற்கான முழு அனுசரணை வழங்கியது. அத்துடன் அமைப்பின் பிரதான உறுப்பினர்கள் பலர் விழாவில் பரசன்னமாயிருந்தனர்.

பாடசாலை அதிபர் எம்ஜிஏ. நாஸர் தலைமையில் இவ்விழா நடைபெற்றது.

இவ்விழாவின்போது மாணவர்கள் பாடசாலை முன்றலிலிருந்து ஹிஜ்ரா நகர் விதியில் ஊர்வலமாகச் சென்று மீண்டும் பாடசாலை வளாகத்தை அடைந்தனர். அதையடுத்து மாணவர்கள் மாலை அணிவிக்கப்பட்டு அரங்கு நிகழ்ச்சிகளுக்கு அழைத்துவரப்பட்டனர்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளரும் நிறுவனத்தின் தலைவருமான ஏஎம். முபாஸ்தீன் மற்றும் சமூக நலன்விரும்பிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் இங்கு அரங்கேற்றப்பட்டன.

மாணவர்களுக்கு பாதணிகள், இனிப்புப் பண்டங்கள் மற்றும் கற்றல் உபகரணங்களும் இங்கு பகிரப்பட்டன. மாணவர்கள் ஆடிப் பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

விசேட தேவையுடைய வகுப்பாசிரியர் எம்ஏ. சுபுஹான் நிகழ்சிகளை நெறிப்படுத்தினார்.

நிறுவனத்தின் உபதலைவர் ஐஎம். தஸிர், பொருளாளர் வசீம் அக்ரம் மற்றும் ஆலோசகர் ஹுஸைன் ஹாஜியார் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் விழாவிற்கு வருகை தந்திருந்தனர்.
(ஏறாவூர் நிருபர்) 773626236