இலங்கையின் 9 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி (மாண்புமிகு. அனுரகுமார திஸாநாயக்க )அவர்களுக்கான திறந்த மடல்..!
தாங்கள் பயங்கரவாதச் சட்டம் (PTA)என்றால் என்ன என்பதை நன்கு உணர்ந்தவர்..! அதனால் பாதிக்கப்பட்டவர், நீங்கள் மாத்திரமல்ல உங்கள் கட்சியின் பல உறுப்பினர்கள் மிகவும் கடுமையான முறையில் பாதிக்கப்பட்டவர்கள்..!
ஏன் 1990 ஆண்டு தமிழ், சிங்கள அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்த (New magazine prison) சிறைச்சாலையில்
JVP தோழர்கள் தடுத்து வைக்கப்பட்ட A,B ward இல் காலை உணவு வேளையில் ஏற்பட்ட
முரண்பாடானது கூர்மையடைந்து JVP தோழர்களுக்கும்,சிறைக்காவலர்களுக்குமான சண்டையில் விமானபடையியின் சிறப்பு அணியும், சிறைக்காவலர்களும் சேர்ந்து எல்லோரையும் சிறைக்குள் பூட்டிய பின்னர் 3 JVP தோழர்களை அடித்தே கொலை செய்தார்கள்..!
அதற்கு C ward இல் நின்று பார்த்த தமிழ் அரசியல் கைதிகளே சாட்சிகள்..!
அதற்கும் அப்பால் இந்த சட்டத்தினால் பல ஆயிரம் மாணவர்கள், அப்பாவிகள் பாதிக்கப்பட்ட வரலாற்றை இலங்கைத் தீவு தன்னகத்தே கொண்டுள்ளது.
இதற்கு முன்னர் ஜனாதிபதியாக வந்தவர்கள்
தமிழர்களை கொலை செய்தவர்களுக்கும்,சட்டத்திற்கு முரணாக செயற்பட்ட பலருக்கும், புத்த பிக்குகளுக்கும்
நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுமன்னிப்பை வழங்கி விடுதலை செய்தார்கள்..!
நீங்கள் இந்த நாட்டை பொறுப்பேற்ற பின்னர் சில அதிரடி மாற்றங்களை உண்டுபண்ணுவதை அவதானிக்க முடிகின்றது..!
தமிழர்களாகிய நாம் போராட்ட சூழலில் வாழ்ந்து உயிரை,உடைமையை,
சொந்தங்களை இழந்து மிகவும் சோர்வடைந்துள்ளோம்..! எங்களுக்கு தங்கள் அரசு என்ன செய்யலாம்..?
இனப்பிரச்சினைக்கான தீர்வு..!
மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே..!
1987 இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பொழுது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்புப் போன்று ..!
அனைத்து தமிழ் அரசியல் கைதிகளுக்குமான உடன் விடுதலை..!
பயங்கரவாத தடைச்சட்டங்களின் கீழ் 1988 -2024 வரை தொடுக்கப்பட்ட வழக்குகளை இரத்துச் செய்தல்..!
அதன் மூலம் ஒரு அமைதியான, பொருளாதார, மற்றும் சகல துறைகளிலும் வளர்ச்சிமிக்க நாட்டை கட்டியெழுப்புதல்..!
1988-2024 வரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு விடுதலையும்,பின்னர் நாட்டை விட்டு வெளியேறி நாடு திரும்ப முடியாதுள்ளவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிப்பதன் மூலம் நாட்டினை வெற்றிப் பாதை நோக்கி வழிநடத்த முடியும்..!
தயவு செய்து அவர்களின் பாதுகாப்பிற்கு அரசு உத்தரவாதம் அளிப்பதும் மற்றும் அவர்கள் எந்த நேரத்திலும் நாட்டிற்குச் சென்று முதலீடுகளை மேற்கொள்ளலாம் என்ற விசேட வர்த்தமானி அறிவித்தலை விடுவதன் மூலம்
கண்டிப்பாக அதிக முதலீட்டாளர்கள் எமது தாய்நாட்டை நோக்கி வருவதற்கான ஏதுவான சூழலை நாட்டின் தலைவராக ஏற்படுத்துதல்..!
அவர்களின் வருகை மாத்திரமல்ல நம் நாட்டின் பொருளாதார பிரச்சனை மற்றும் நீங்கள் அமைக்க விரும்பும் ஆட்சியை நோக்கி இதன் பலாபலன்கள் அமையும்…!
இன்னும் இரண்டே மாதத்தில் மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி இலங்கைத் தீவானது நகரும்..!
புலம்பெயர் மக்களின் மனங்களை வெல்லலாம்.!
நாட்டில் வாழும் அனைத்து மக்களும் வரவேற்பர்..!
உங்கள் அரசியல் வாழ்வில் இது மிகப்பெரும் வரலாறாக அமையும்.
நன்றி.
தோழர்
மாட்டின் ஜெயா.
ශ්රී ලංකාවේ 9 වැනි විධායක ජනාධිපති (ගරු අනුරකුමාර දිසානායක) ට විවෘත තට්ටුවක්..!
ත්රස්තවාදී පනත (PTA) යනු කුමක්දැයි ඔවුන් හොඳින් දනී..! වින්දිතයා ඔබ පමණක් නොව ඔබේ පක්ෂයේ බොහෝ දෙනෙක් දැඩි ලෙස පීඩාවට පත්ව සිටිති..!
1990 දී දෙමළ සහ සිංහල දේශපාලන සිරකරුවන් බන්ධනාගාරයේ රඳවා තැබුවේ ඇයි (නව සඟරාව බන්ධනාගාරය)
එය සිදුවූයේ ජවිපෙ සහෝදරයින් රඳවා සිටි A,B වාට්ටුවේ උදෑසන ආහාරය අතරතුරය
ගැටුම උත්සන්න වූ අතර ගුවන් හමුදාවේ විශේෂ බළකාය ජවිපෙ සහෝදරවරුන්ට සහ බන්ධනාගාර නියාමකයින්ට එරෙහිව සටන් කළහ. සියල්ලන්ම හිරගෙදරට දමා හිරගෙදර නියාමකයෝ ජවිපෙ සහෝදරයින් 3 දෙනෙකුට පහර දී ඝාතනය කරති..!
C වාට්ටුවේ සිටගෙන සිටින දෙමළ දේශපාලන සිරකරුවන් සාක්ෂිකරුවන්..!
ඉන් ඔබ්බට මෙම නීතියෙන් පීඩාවට පත් වූ දහස් ගණන් සිසුන්ගේ සහ අහිංසක මිනිසුන්ගේ ඉතිහාසයක් ශ්රී ලංකා දිවයිනටම තිබේ.
මීට කලින් ජනාධිපති වෙලා ආපු අය
දෙමළ මිනිස්සු මරපු අයට, නීතියට පටහැනිව ක්රියා කළ බොහෝ අයට, බෞද්ධ භික්ෂූන්ට
විධායක බලය පාවිච්චි කරලා සමාව දීලා නිදහස් කළා..!
ඔබ මේ රට භාර ගැනීමෙන් පසු දැඩි වෙනස්කම් කිහිපයක් සිදු කර ඇති බව නිරීක්ෂණය කළ හැකිය..!
දෙමළ ජනතාව වශයෙන් අපි ජීවත් වන්නේ අරගලකාරී වාතාවරණයක ජීවිතය, දේපළ අහිමි වීම,
අපිට අපේම නැතිවෙලා ගොඩක් මහන්සියි..! ඔවුන්ගේ රජයට අප වෙනුවෙන් කුමක් කළ හැකිද?
ජනවාර්ගික ගැටලුවට විසඳුම..!
ගරු ජනාධිපතිතුමනි..!
1987 ඉන්දු – ශ්රී ලංකා ගිවිසුම අත්සන් කරන විට ත්රස්තවාදය වැලැක්වීමේ පනත යටතේ අත්අඩංගුවට ගත් අයට ලබා දුන් පොදු සමා කාලය වගේ..!
සියලුම දෙමළ දේශපාලන සිරකරුවන් නිදහස් කරනු..!
ත්රස්ත මර්දන පනත යටතේ 1988-2024 දක්වා පවරා ඇති නඩු අවලංගු කිරීම..!
ඒ හරහා සෑම අංශයකින්ම සාමකාමී, ආර්ථික හා දියුණු රටක් ගොඩනැගීම..!
1988-2024 ත්රස්තවාදය වැලැක්වීමේ පනත යටතේ අත්අඩංගුවට ගෙන රඳවාගෙන සිටින අයට පොදු සමාවක් ලබාදීමෙන් සහ රටින් පිටව ගොස් මෙරටට පැමිණීමට නොහැකි වූවන්ට පොදු සමාව ලබාදීමෙන් රට සාර්ථකත්වය කරා ගෙන යා හැකියි..!
ඔවුන්ට අවශ්ය ඕනෑම මොහොතක මෙරටට පැමිණ ආයෝජන සිදු කළ හැකි බවට අතිවිශේෂ ගැසට් නිවේදනයක් නිකුත් කරමින් ඔවුන්ගේ ආරක්ෂාව සහතික කරන මෙන් රජයට කාරුණික වන්න.
අනිවාර්යයෙන්ම රටේ නායකයා ලෙස අපේ මාතෘභූමිය දෙසට ආයෝජකයන් වැඩි වැඩියෙන් පැමිණීමට හිතකර පරිසරයක් නිර්මාණය කරනවා..!
ඔවුන්ගේ පැමිණීම අපේ රටේ ආර්ථික ප්රශ්නය පමණක් නොව එහි ප්රතිලාභ ඔබ පිහිටුවීමට අවශ්ය රජයට වනු ඇත…!
මාස දෙකකින් ශ්රී ලංකා දිවයින දැවැන්තම වෙනස කරා ගමන් කරයි..!
ඩයස්පෝරා ජනතාවගේ සිත් දිනා ගත හැක.!
දිවයිනේ වෙසෙන සියලුම ජනතාව සාදරයෙන් පිළිගනිමු..!
මෙය ඔබගේ දේශපාලන දිවියේ විශිෂ්ට සන්ධිස්ථානයක් වනු ඇත.
ඔයාට ස්තූතියි
සහෝදරයා
මතින් ජය.
An open flap for Sri Lanka’s 9th Executive President (Hon. Anurakumara Dissanayake)..!
They are well aware of what the Terrorism Act (PTA) is..! The victim is not only you but many members of your party are severely affected..!
Why in 1990 Tamil and Sinhalese political prisoners were detained in the prison (New magazine prison)
It happened during breakfast in A,B ward where JVP comrades were detained
The conflict escalated and the special forces of the Air Force fought against the JVP comrades and the prison guards. After locking everyone inside the jail, the jail guards beat and killed 3 JVP comrades..!
The Tamil political prisoners standing in C ward are the witnesses..!
Beyond that, the island of Sri Lanka has a history of thousands of students and innocent people affected by this law.
Those who came as president before this
To those who killed Tamils,
to many who acted against the law, to Buddhist monks
They used the executive power to grant amnesty and set them free..!
It can be observed that you have made some drastic changes after taking charge of this country..!
As Tamils, we live in an atmosphere of struggle and lose life, property,
We are very tired of losing our own..! What can their government do for us?
The solution to the ethnic problem..!
Honorable President..!
Like the amnesty granted to those arrested under the Prevention of Terrorism Act when the 1987 Indo-Sri Lanka Treaty was signed..!
Release with all Tamil political prisoners..!
Cancellation of cases filed from 1988-2024 under the Anti-Terrorism Acts..!
Through that building a peaceful, economic and developed country in all sectors..!
By granting amnesty to those who have been arrested and detained under the Prevention of Terrorism Act from 1988-2024 and amnesty to those who have left the country and cannot return to the country, the country can be led towards success..!
Please the government to guarantee their safety and by issuing a special gazette notification that they can visit the country and make investments at any time.
Definitely creating a favorable environment for more investors to come towards our motherland as the leader of the country..!
Their arrival is not only the economic problem of our country and its benefits will be towards the government you want to establish…!
The island of Sri Lanka will move towards the biggest change in two months..!
Can win the hearts of diaspora people.!
Welcome to all people living in the country..!
This will be a great milestone in your political career.
thank you
Comrade
Matin Jeya.