புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளும் போட்டி

(சுமன்)

தமிழர் தலைநகரில் சுயேற்சைக் குழுவுக்கான தன் முதற் கட்டுப்பணத்தைச் செலுத்தியது புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி…

எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கில் சுயேற்சையாகக் களமிறங்கத் தீர்மானித்திருக்கும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி தமிழர் தலைநகரான திருகோணமலையில் இன்றைய தினம் தன் முதற் கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தலைமையிலான குழுவினரால் திருகோணமலை தேர்தல்கள் ஆணையகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

இம்முறை பொதுத்தேர்தலில் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியானது வடகிழக்கிலுள்ள ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் சுயேற்சையாகக் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.