நுரைச்சோலை பாடசாலையில் உருவாக்கப்பட்ட ப்ரொஜக்ட் 40 D வெற்றி

நுரைச்சோலை தேசிய பாடசாலையின் 2023/24 க.பொ.த.(சா/த) பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான ப்ரொஜக்ட் 40 D வேலைத்திட்டத்தினை வெற்றிக்கனியாக்கிய மாணவச் செல்வங்களை வரவேற்று பாராட்டும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (01) காலை அதிபர் எம்.ஐ.எம். இம்ரான்கான் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

இதுவரையில் 55 வீதமாக இருந்த பாடசாலையின் க.பொ.த.(சா/த) பரீட்சையின் பெறுபேறுகள் இம்முறை 70 வீதமாக உயர்வடைந்துள்ளதோடு மொஹமட் பஸ்லன் மொஹமட் சிப்ராஸ் , றஜாப்தீன் அப்ராஸ் அஹமட் மற்றும் மொஹமட் மவுஜூத் பாத்திமா நதா ஆகிய மூன்று மாணவர்கள் 9A சித்திகளையும் பெற்றுள்ளமை வரலாற்று சான்றாக பதிவாகியுள்ளது.

அத்தோடு பாடசாலை முகாமைத்துவ குழுவின் ஏற்பாட்டில் முதல் முறையாக இம்மாணவச் செல்வங்களோடு ஆரம்பம் முதல் அயராது பாடுபட்டு உழைத்த சகல ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டமை பாடசாலை வரலாற்றில் முக்கிய விடயமாகும்.

இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்கம் சார்பாக அஷ்ஷெய்க் முஜாஹித் (மதனி) அவர்களது வாழ்த்துச் செய்தியும் இங்கு பதிவு செய்யப்பட்டது.

( கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)