சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்முனை பொது நூலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (01) சிறப்பு நிகழ்வு ஒன்று நடைபெற்றது.
நூலகர் ஏ.எல்.எம். முஸ்தாக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் என். பரமேஸ்வர வர்மன் ஆகியோர் அதிதிகளாக பங்கேற்றிருந்தனர்.
இந்நிகழ்வில் கல்முனை விவேகானந்த வித்தியாலயத்தை சேர்ந்த ஒரு தொகுதி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது இம்மாணவர்கள் நூலகத்தின் அனைத்து பிரிவுகளையும் முழுமையாக பார்வையிட்டதுடன் சிறுவர் தினத்தின் முக்கியத்துவம், நூலகப் பயன்பாடு மற்றும் வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்கள் அனைவருக்கும் இனிப்புப் பண்டங்களும் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
(அஸ்லம் எஸ்.மெளலானா)