சிறுவர் தினத்தை முன்னிட்டு மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு அகரம் பாலர் பாடசாலையில் சர்வதேச சிறுவர் தினம் நடைபெற்றது.
பிள்ளைகளை பாதுகாப்போம் சமமாக நடத்துவோம் எனும் தொனிப்பொருளில் இவ் வருடம் சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படுகிறது .
அகரம் பாலர் பாடசாலையின் தலைவர் செ.துஜியந்தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் முதன்மை அதிதியாக மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் மா.சோமசூரியம் கலந்து கொண்டார். கெளரவ அதிதிகளாக புதுக்குடியிருப்பு விக்னேஸ்வர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கிரிதரக் குருக்கள், ஆலய பரிபாலன சபை தலைவர் கே.கேதாகரன், கிராம சேவை உத்தியோகத்தர்களாக டிலக்சன் , திருமதி தயனி கிருஷ்ணாகரன், சமூக செயற்பாட்டாளர் இளங்கீரன், வண்ணக்கர் சிவப்பிரகாசம் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு சிறுவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம், பேச்சு, கவிதை, பாடல், சிறுவர் கலைநிகழ்வுகள் ஆகியன நடைபெற்றதுடன் சிறுவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.