( வி.ரி.சகாதேவராஜா) இம்முறை வெளியான கபொத சாதாரண தர பரீட்சையில் கிழக்கு மாகாணம் 2ம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
கடந்த வருடம் 73.75 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தில் இருந்த கிழக்கு மாகாணம், இம்முறை 77.36 புள்ளி பெற்று அதிரடி பாய்ச்சலில் இரண்டாம் நிலைக்கு முன்னேறியுள்ளது.
கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தலைமையிலான கல்விசார் குழாத்தினர் நுணுக்கமான அணுகுமுறை மிகச்சிறந்த வழிகாட்டல் மற்றும் உரிய காலத்தில் பகுப்பாய்வு செய்தல் போன்றவைகளினால் இச் சாதனை எட்டப்பட்டது எனலாம்.
அதேவேளை மாணவர்கள் ஆசிரியர்கள் அதிபர்கள் பெற்றோர்கள் பலரினும் கூட்டு முயற்சி எனலாம்.