கோரக்கரில் கோலாகலமான கௌரவிப்பு!

சம்மாந்துறை வலயத்தில் கடந்த 36 வருடங்கள் கல்விச் சேவையில் இருந்து ஓய்வு பெறும் உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜாவிற்கான கௌரவிப்பு விழா கோரக்கர் தமிழ் மகா வித்தியாலய அதிபர் எஸ்.இளங்கோபன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

அவரது சேவையை பாராட்டி அதிபர் ஆசிரியர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார்கள்.

பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் எஸ்.மோகன் கலந்துகொண்டு வாழ்த்தி உரையாற்றினார்.

நிகழ்வில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
( காரைதீவு சகா)