பொத்துவில் களுகொல்லயில் பரோபகாரி ஜீவா விஜி அன்பளித்த குழாய் நீர் வசதி

பொத்துவில் பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய களுகொல்ல கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு குழாய் நீர் விநியோகத்தை சுவிட்சர்லாந்தில் வாழும் பாண்டிருப்பைச்சேர்ந்த பரோபகாரி. திருமதி ஜீவா விஜி திரைநீக்கம் செய்து மக்களிடம் ஒப்படைத்தார்.

சிவஜோதி அமைப்பின் தலைவர் மதி மற்றும் செயலாளர் நந்தினி தலைமையில் இந் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் இக் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. ஜீவாவின் நெருங்கிய தோழி அலா நுஸ்ரத்டினோரே
Allah Nustret Dynore இதற்கான உதவியை வழங்கினார்.

இந்நிகழ்வில் சமுக செயற்பாட்டாளர்களான கி. ஜெயசிறில் ,வா. குணாளன், எஸ். அருளம்பலம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

களுகொல்ல ஊர்ப் பொதுமக்கள் பல கருத்துக்களை முன் வைத்தார்கள்.

பொதுவான கட்டடங்கள் மண்டபங்களின் இல்லாத குறையை நிவர்த்தி செய்து தர வேண்டும் என்ற விடயத்தை கூறினார்கள்.

பரோபகாரி திருமதி ஜீவா உரை நிகழ்த்துகையில்..

மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இக் கிராமமக்கள் வாழ்ந்து வருவது கவலைக்குரியது.
நிச்சயமாக எதிர்வரும் காலங்களில் இங்குள்ள தேவைகளை படிப்படியாக செய்து தரலாமென நினைக்கிறேன் என்று கூறினார் .

புலம்பேர் பெருமளவான பணத்தை இதற்கான செயல்பாடு செய்ய முடியாது என்றும் அரசு நிதியை பயன்படுத்தி இந்த பிரதேசத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன் . என்றும் கூறினார்.
( வி.ரி. சகாதேவராஜா)