கிழக்கில் பூகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் நேற்று வெளியான க.பொ.த. சாதாரண பரீட்சை பெறுபேறுகளின்படி 30 மாணவர்கள் 9A சித்தி பெற்றுள்ளார்கள்.
கல்முனை வலயத்தில் தனி ஒரு பாடசாலை இவ்வாறு 9 ஏ கூடுதலாக பெற்றது இப் பாடசாலையில் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் 18 மாணவர்கள் இப் பாடசாலையில் 9 ஏ பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கல்லூரி அதிபர் அருட்சகோ. எஸ்.இ.றெஜினோல்ட் கூறுகையில்..
எமது பாடசாலையில் இதுவரை 30 மாணவர்கள் ஒன்பது ஏ சித்தி பெற்றுள்ளார்கள். ஏனைய எட்டு ஏ ஏழு ஏ சித்தி களின் பகுப்பாய்வு நடைபெறுகிறது.
கல்முனை வலயத்தில் தனி ஒரு பாடசாலை 9 ஏ கூடுதலாக பெற்றது எமது பாடசாலையிலாகும்.
அதற்காக ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றிகள் கூறுகிறேன்
என்றார்.