வாரம் இருமுறை திருகோணமலை நகரில் திண்ம கழிவுகளை அகற்றி வந்த திருகோணமலை நகர சபை , சமீப காலமாக குப்பைகளை அகற்றுவதில் தாமதமும் சில இடங்களில் குப்பைகளை அகற்றாமலும் உள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தற்போது நகராட்சி மன்றத்தில் கழிவு அகற்றும் பணியில் மூன்று வாகனம் மட்டுமே சேவையில் உள்ளதாகவும் , பழுதடைந்த வாகங்கள் திருத்த நிதி இல்லாமல் இருப்பதாகவும் , இயங்கும் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப கூட நகராட்சி மன்றில் நிதி பற்றா குறையாக உள்ளதாகவும் நகராட்சி மன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நாட்டில் உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டுள்ள நிலையில் சகல உள்ளூராட்சி சபைகளும் செயலாளரின் கீழ் இயங்கி வருகின்ற நிலையில் திருகோணமலை நகராட்சி மன்றத்தில் உள்ள செயலாளரின் கவலையீனத்தினால் இவ்வாறான குறைபாடுகள் இடம் பெற்று வருகின்றனவா?
திருகோணமலை மாவட்டத்தில் அதிக வருமானம் ஈட்டக்கூடிய சபையாக திருகோணமலை நகர சபை இருக்கின்ற நிலையில் நிதி முறைகேடாக பயன்படுத்தப்படுகின்றதா?
இந்தளவு நிதி பற்றாகுறை எற்பட என்ன காரணம் ?
இந்த விடயம் யாருக்கும் தெரியாதா ?
இந்த விடயத்தை மறைக்க நினைப்பவர்களுக்கும் ஊழலில் பங்கு உண்டா ?
நிதி முறைகேடாக வேறு தேவைக்கு பயன்படுத்த பட்டதா ?
நிதியை அதிகாரத்தில் இருந்த தனி நபரோ அல்லது அவரது சகாக்களோ பயன்படுத்தினரா ?
உண்மை நிலவரம் என்ன ?
என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நாட்டில் பாரியதொரு ஆட்சி மாற்றத்தின் பின்னர் திருகோணமலை நகராட்சி மன்றத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இருக்கின்றமை கவலைக்குரிய விடயம் எனவும் இது தொடர்பில் மத்திய அரசு தலையிட்டு இது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை