சித்த ஆயுர்வேத வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்திய அத்தியட்சகராக கடமையேற்பு!

கோபாலபுரம் மாவட்ட சித்த ஆயுர்வேத வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றி வந்த வைத்தியர் எம்.நிரஞ்சன் நிரந்தர வைத்திய அத்தியட்சகராக நியமனம் பெற்று அவர், தனது கடமையை (25) உத்தியோகபூர்வமாக
பொறுப்பேற்றுக் கொண்டார்.

கிழக்கு மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கடமையாற்றி வந்த சிரேஷ்ட தரம் 1 யைச் சேர்ந்த ஆயுர்வேத வைத்தியர்களுக்கான நேர்முகத்தேர்வு அன்மையில் கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்டது.

அத்தேர்வில் வைத்தியர் எம்.நிரஞ்சன் சித்தியடைந்து அவர் கடமையாற்றும் வைத்தியசாலைக்கே நிரந்தர வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டு இன்றைய தினம் கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.

வைத்திய கலாநிதி செ.போல்ரன் றஜீவ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வைத்தியர் என்.பி.மோகனச்சந்திரன், பயிற்சி வைத்தியர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டு அவரின் சேவைகள் பற்றி உரையாற்றியதுடன்,
வைத்திய கலாநிதி செ.போல்ரன் றஜீவினால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அபு அலா