புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய

இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் இன்று (24) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

கலாநிதி ஹரிணி அமரசூரிய இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றுக்கொள்கிறார்.

சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் இதற்கு முன்னர் இலங்கையின் பெண் பிரதமர்களாக பதவி வகித்துள்ளனர்.

2020 பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கலாநிதி ஹரிணி அமரசூரிய, அரசியலில் நுழைவதற்கு முன்பு நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் துறையில் மூத்த விரிவுரையாளராகப் பணியாற்றினார்.