வரலாற்று பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய ஏர் பூட்டு விழா இன்று (24) செவ்வாய்க்கிழமை விழாக்குழுத் தலைவர் க.சிவகுருநாதன் தலைமையில் பாரம்பரிய சம்பிரதாய முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மு கு. சச்சிதானந்த குருக்கள், ஆலய குரு சிவஸ்ரீ வ. ஜோதிலிங்க குருக்கள் ஆசியோடு நிகழ்வு ஆலய காணியில் ஆரம்பமானது.
நிகழ்வில் அதிதிகளாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், பட்டிப்பளை பிரதேச இந்து ஆலயங்களின் ஒன்றியத் தலைவர் கலாபூஷணம் ஞானபேரின்பம் ஆகியோர் கலந்து கொண்டார்கள் .
ஆலய பரிபாலன சபையின் வண்ணக்கர்களான இ
. மேகராசா( தலைவர் ), சி.கங்காதரன்( செயலாளர் ),ச. கோகுலகிருஷ்ணன் ( பொருளாளர்) ஆகியோர் ஏர் பூட்டு விழாவை சம்பிரதாய முறைப்படி ஆரம்பித்து வைத்தார்கள்.
நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச முன்னாள் தவிசாளர் அதிபர் சிவ.அகிலேஸ்வரன் உள்ளிட்ட பிரமுகர்களும் விவசாயப்பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
( வி.ரி.சகாதேவராஜா)