புதிய ஜனாதிபதியின் பதவியேற்புக்கு ஆசி வேண்டி கல்முனை ஆலயத்தில் விஷேட பூசை வழிபாடு

புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக நேற்று பதவியேற்பதற்கு ஆசி வேண்டி கல்முனை தொகுதி தேசிய மக்கள் கட்சி செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் விசேட பூசை வழிபாடு கல்முனை ஸ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று (23) திங்கட்கிழமை காலை இடம் பெற்றது.

புதிய ஜனாதிபதி அநுரகுமார குமார தலைமையில் மக்களுக்கான இனமதபேதமற்ற ஆட்சி சிறப்பாக இடம் பெற ஆசி வேண்டி விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றது.

இவ் வழிபாட்டில் தேசிய சமாதான அபிவிருத்தி மையத்தின் தலைவர் வி. ரி. சம்பந்தர் தலைமையில் தேசிய மக்கள் கட்சி செயற்பாட்டாளர்கள், மற்றும் ஆலயங்களின் நிருவாகத்தினர், புத்திஜீவிகள், ஆதரவாளர்கள் என பலர் பங்குபற்றியிருந்தனர்.

பூசை வழிபாடுகள் சிவஸ்ரீ ச. கு. ரேவதீசன் குருக்கள் தலைமையில் சிறப்பாக இடம் பெற்றது.

பூஜை நிறைவில் நாட்டிற்கு நல்லாசி வேண்டி பிரார்த்தனை இடம் பெற்றது.