தேர்தலுக்கு மத்தியிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் படை சூழ சிறப்பாக நடைபெற்ற கொக்கட்டிசோலை தேரோட்டம்

தேர்தல் களேபரத்திற்கு மத்தியில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த தேரோட்ட வைபவம் மிகவும் சிறப்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

ஆலய பிரதம குருக்கள் சிவசிறி மு.கு.சச்சிதானந்த குருக்கள் முன்னிலையில் ஆலய தலைவர் இ. மேகராசா (அதிபர் )தலைமையில் நிகழ்வு இடம் பெற்றது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர்தல் நிலவரத்தையும் கவனிக்காமல் அங்கு ஒன்று கூடினர்.

ஆலயத்தில் பூஜைகள் இடம் பெற்று இரண்டு அலங்கார சித்திரத்தேரில் தெய்வங்கள் ஆரோகணிக்க அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க தேர்கள் அசைந்தன.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க அடம் பிடித்தனர். எனினும் பகுதி பகுதியாக அவர்கள் நெரிசலுக்கு மத்தியில் வடம் பிடித்தனர்.

தேரோட்டம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
( வி.ரி.சகாதேவராஜா)