அனுரவுடன் கூட்டணி அமைக்க பேச்சவார்த்தை நடாத்தும் மலையகத்தின் பிரதான கட்சி

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அக்கட்சி முக்கியஸ்தர்களுடன் மலையகத்திலுள்ள பிரதான கட்சியின் பிரமுகர்கள் பேச்சு நடத்திவருகின்றனர்.

கொழும்பில் முகாமிட்டுள்ள மேற்படி கட்சி உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தியினருடன் நேரடி பேச்சில் ஈடுபட்டு, அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் ஆராய்ந்துவருகின்றனர் என தெரியவருகின்றது.

எதிர்காலத்தில் அமையவுள்ள இடைக்கால அரசு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன எனவும், மலையகத்துக்கான வேலைத்திட்டங்கள் பற்றி ஆராயப்பட்டுள்ளன எனவும் அறியமுடிகின்றது.