உலக அமைதி பெற அமைதிப் பயணம்!

இந்தியாவில் தென் கைலாயம் என்று அழைக்கப்படும் திருமூர்த்திமலை அடிவாரத்தில் பரஞ்சோதி மகானால் ஸ்தாபிக்கப்பட்ட குண்டலினியோக மையமும் உலகச் சமாதான ஆலயமும் ஸ்ரீ பரஞ்சோதி கல்லூரியும் அமைந்துள்ளஅதன் ஸ்தாபகர் குருமகானும் அறங்காவலர்களும் லண்டன் வருகை தந்துள்ளனர்

லண்டன் கற்விக் சர்வதேச விமான நிலையத்தில் அறங்காவலரும் சென்னை சில்க் தொழிலதிபருமான திரு .விநாயகம் திருமதி மீனாட்சி விநாயகம் அவர்களுடன் திரு விஸ்வநாதன் திரு .குமாரசாமி 19.09.2024 அன்று மாலை லண்டன் வந்தார்கள் அவர்களை உலக சமாதான ஆலயத்தின் சுவிஸ்லாந்து தலைவர் வேலுப்பிள்ளை கணேசகுமாரும் இலண்டன் சைவ முன்னேற்ற சங்கத்தின் உப தலைவரும் உலக திருக்குறள் பேரவை இலண்டன் கிளை செயலாளருமான சமூக சீலர் சிவா தம்புவும் இணைந்து பொன்னாடை பேர்த்தி வரவேற்றனர்
இவர்கள் உலக சமாதானத்திற்காக எதிர்வரும் 11.11.2024 அன்று 11மணி 11 நிமிடத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்தும் ஒரு நிமிட பிரார்த்தனை செய்ய எல்லோரையும் ஒருங்கிணைப்பதும் குண்டலினியோக பயிற்ச்சிக்காக உலகம் அமைதி பெற பயணம் செய்ய உள்ளனர்