நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்.

(எருவில் துசி) நாடு பூராகவும் உள்ள மக்களுக்கு விடுக்கப்பட்டிருக்கின்ற முக்கிய அறிவித்தல் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. எனவே நாளை காலை 6 மணி வரை எந்த மக்களும் வெளியில் செல்ல முடியாது என அறிவிக்கப்பட்டிருக்கின்றது அதே நேரம் வெளிநாடு செல்கின்றவர்கள் அத்தியாவசிய சேவை கருதி வெளியே செல்கின்றவர்கள் தமது முறையான ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில் செல்ல முடியும் என்பதோடு வெளிநாடு செல்லவர்கள் தமது உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயணம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டிருக்கின்றது.