(எருவில் துசி) மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு முடிவுக்கு வந்துள்ளது. வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குச்சீட்டுகளுடன் வாக்கு எண்ணும் நிலையத்திற்கு அதிகாரிகள் சென்ற வண்ணம் உள்ளனர். 70 வீதமான வாக்குகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அளிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவிக்கின்றார். இன்று வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது அதாவது தபால் மூல வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து ஏனைய வாக்குகள் எண்ணும் பணிக்கு அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் வாக்குப் பெட்டிகள் வாக்கெடுப்பு நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட பின்பு அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் அறிவித்துள்ளார்.
47 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு அதில் 10 தபால் மூல வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.