ஒன்பதாவது ஜனாதிபதியினை தெரிவு செய்யும் ஜனாதிபதி தேர்தல் திருகோணமலை மாவட்டத்தில் சுமூகமாக இடம் பெற்று வருவதாகவும் இதுவரை எந்த ஊரு அசம்பாவிதங்களும் பதிவாகவில்லை என பஃபரல் அமைப்பின் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருட்பணி. கலாநிதி. போல் றோபின்சன் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை முதல் புல்மோட்டை வரை 20க்கும் மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்கள் கண்காணிக்கப்பட்டதாகவும், திருகோணமலை முதல் கந்தளாய் வரையான பிரதேசத்தில் 15க்கும் மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்கள் கண்காணிக்கப்பட்டதாகவும் தெரிவித்த அருட்பணி. கலாநிதி. போல் றோபின்சன்.
திருகோணமலை மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை ஒரு சிறிய அசம்பாவிதங்கள் கூட இடம்பெறவில்லை எனவும் சுமுகமான முறையில் ஜனாதிபதி வாக்கு பதிவு இடம்பெற்று வருவதாகவும் வாக்கு பதிவு நிலையங்களில் பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் மக்கள் ஆர்வத்துடன் தமது வாகினை பதிவு செய்வதாக பஃபரல் அமைப்பின் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருட்பணி. கலாநிதி. போல் றோபின்சன் தெரிவித்தார்.