மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருடன் பொதுநலவாய கண்காணிப்பாளர்கள் சந்திப்பு!!

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜஸ்டினா முரளிதரனை தேர்தல் தொடர்பான கண்காணிப்பினை முன்னெடுத்து வரும் பொதுநலவாய காண்காணிப்பாளர்கள் மட்டக்களப்பு தேர்தல்கள் மத்திய நிலையமான இந்து கல்லூரியில் இன்று (20) திகதி சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுவாய கண்காணிப்பாளர்கள் ஜனாதிபதி தேர்தல்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலவரம் தொடர்பாக இதன் போது விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.

மேலும் ஜனாதிபதி தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னாயத்த நடவடிக்கைகள், பாதுகாப்பு, மற்றும் தேர்தல்கள் வீதிமிறல்கள் தொடர்பான விளக்கங்களையும் கண்காணிப்பாளர்களுக்கு தெரிவத்தாட்சி அலுவலகள் தெளிவூட்டியுள்ளார்.
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு