கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்ட தொளஸ் மகேபான வேலைத்திட்டத்தின் கீழ் மீலாதுந் நபி பிறந்த தினம் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் (18) புதன் கிழமை இடம்பெற்றது.
உதவி பிரதேச செயலாளர் எம்.ஜ. முஆபிகாவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம். றின்ஸான், உதவி பிரதேச செயலாளர் என்.எப். அய்மா, நிர்வாகப் பிரிவு பிரதம முகாமையாளர் ஏ.சீ. முஹம்மட், சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸான், சாய்ந்தமருது பிரதேச முஸ்லிம் கலாசார உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் அஸீம் (நளீமி), கலாசார உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் ஏ.எம். தௌபீக் (நளீமி), கலாசார பிரிவைச் சார்ந்த உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட தஃவா இஸ்லாமிய கலாபீட மாணவர்களும் கலந்துகொண்டனர்.
ஒருங்கிணைப்பாளர் ஏ.எச். சபிக்காவின் நெறிப்படுத்தலில் இனிதே நடைபெற்ற இந்நிகழ்வில், தஃவா இஸ்லாமிய கலாபீட மாணவர்களின் இஸ்லாமிய நிகழ்வுகளும் மற்றும் அஷ்ஷெய்க் மௌலவி ஏ.எம்.தௌபீக் (நளீமி) முகம்மது நபி (ஸல்) அவர்களின் குண இயல்புகளும் வாழ்க்கை நடைமுறைகளும் என்ற தலைப்பில் மார்க்க சொற்பொழிவும் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)