கடந்த எட்டு ஜனாதிபதிகளுக்கு வாக்கு போட்டு தமிழர்கள் கண்ட பலன் என்ன?எட்டு ஜனாதிபதிகளும் தமிழ் மக்களை ஏமாற்றினார்கள்.
இவ்வாறு திராய்க்கேணியில் நேற்று மாலை இடம் பெற்ற பொது வேட்பாளர் அரியத்தை ஆதரிக்கும் பொதுக் கூட்டத்தில் பேசிய தாயக செயலணியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்..
பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திக்கப்பட்டன. பல உறுதிமொழிகள் அளிக்கப்பட்டன. ஆனால் அத்தனையும் கிழித்தெறியப்பட்டு ஏமாற்றப்பட்டதே வரலாறு .
தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளில் புத்தர் சிலைகளை அமைத்து நில ஆக்கிரமிப்பு செய்கிறார்கள்.அந்த வகையில் சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வாக்கு போடத்தான் வேண்டுமா? சற்று சிந்தியுங்கள். இம்முறையாவது சர்வதேசத்திற்கு எமது ஒற்றுமையை வெளிக்காட்டுமுகமாக சங்குக்கு வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகின்றேன் .