அகில இலங்கை பாடசாலை சித்திர போட்டியில் துறைநீலாவணை மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிசெய்யப்பட்டுள்ளனர். இம்மாணவர்களை பாராட்டி கெளவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் கு.திருச்செல்வம் தலைமையில் கடந்த வாரம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தினை எஸ்.மிதுஷனும், மூன்றாம் இடத்தினை உ.யருக்ஸனும் பெற்றுக்கொண்டதோடு, கணினி ஓவியம், பொருட்கூட்டம், புத்தக அட்டை, மரபு ரீதியான இருபரிமாண கலாசார அலங்கார நிர்மாணிப்பு மற்றும் சுவரொட்டி சித்திரம் போன்ற தலைப்புகளின் கீழ் சி.வித்தகன், தூ.லிலக்ஸாந், பே.கிரிஷாளன், த.கிதுசன், எஸ்.ஹேமநாத், கி.தட்ஷாயினி ஆகிய மாணவர்கள் சிறப்புச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.
துறைநீலாவணை மகா வித்தியாலயத்திலிருந்து முதன்முறையாக அகில இலங்கை பாடசாலை சித்திரப் போட்டியில் தேசிய மட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள இம்மாணவர்களுக்கு முறையான பயிற்சி மற்றும் வழிகாட்டல்களை தேசிய கலைஞரும், ஓவிய ஆசிரியருமான கலைஞர்.ஏ.ஓ.அனல் (ஜீவராசா) வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.