முஸ்லிம்கள் என் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையை எப்போதும் உடைக்க மாட்டேன். அதனைப் பாதுகாப்பேன் என நான் உங்களுக்கு உறுதிமொழி வழங்குகின்றேன் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்கவை ஆதரித்து ஏற்பாடு செய்த கல்முனை தொகுதியின்
வெற்றிக்கான மாபெரும் தேர்தல் பிரசார கூட்டம் (13) வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது மருதூர் சதுக்கத்தில் நடைபெற்றது.
“வளமான நாடு அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில், தோழர் அநுர குமார திசாநாயக்கவின்
கல்முனை தேர்தல் தொகுதி இணைப்பாளரும் தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினருமான ஏ. ஆதம்பாவாவின் தலைமையில் இடம்பெற்ற இம்மாபெரும் விழாவில்,பேசிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க மேலும் கூறுகையில்,
எதிர்வரும் சனிக்கிழமை தேர்தல். நாங்கள் என்ன செய்வது? நீங்கள் வாக்களிக்கத் தயாரா? நீண்ட காலமாக எங்கள் நாட்டு மக்கள் தலைவர்களைக் கொண்டு வந்தார்கள். ஆட்சிகளைக் கொண்டு வந்தார்கள். ஆட்சிகளை மாற்றினார்கள். தலைவர்களை மாற்றினார்கள். ஆனால், என்ன நடந்ததென்றால், நாடானது அதல பள்ளத்தில் விழுந்தது. பொதுமக்கள் ஏழைகளாக மாறினர். ஆனால், அரசாங்கங்கள் மூலமாக ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்ட ஆட்சியாளர்கள் வசதியாளர்களாக மாறினார்கள். நாடு ஏழையானது. பொதுமக்கள் ஏழையானார்கள். ஆகையினால், மிக முக்கியமான காரணம், இந்த ஆட்சியாளர்கள் எங்களது நாட்டை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கவில்லை. இந்த ஆட்சியாளர்கள் அவர்கள் தங்களை வெற்றி கொள்வதற்காகத்தான் முயற்சி செய்தார்கள்.
ஆகையினால், செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி ஓர் அரசாங்கத்தைக் ஆக்கிக் கொள்வோம். இந்த நாட்டைக் கட்டி எழுப்பக்கூடிய அரசாங்கம் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம்.
தற்போது இந்தத் தேர்தலை சற்று உற்று நோக்கிப் பார்க்கும் பொழுது தேசிய மக்கள் சக்தியின் வெற்றி உறுதியாகிவிட்டது. தெற்கிலே வாழுகின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்து மக்களும் கைகோர்த்துக்கொண்டு தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து இருக்கின்றார்கள். இந்த சாய்ந்தமருதிலே வாழுகின்ற முஸ்லிம் மக்களின் முடிவு என்ன?
ஆனால், இந்த வெற்றியை தவிர்ப்பதற்காக அவர்கள் பொய்களையும் கட்டுக்கதைகளையும் இட்டுக் கதைகளையும் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அண்மையில் ஹிஸ்புல்லாஹ் வந்தார். ஹிஸ்புல்லாஹ் இந்த இடத்துக்கு வந்து, எங்களைப்பற்றி மிக மோசமாக இழிவாக பேசிச் சென்றார். முஸ்லிம் மக்கள் தங்களுடைய மார்க்கக் கடமைகளில் முக்கியமாகக் கருதுகின்ற இரண்டு பெருநாட்கள். ஒன்று நோன்புப் பெருநாள் மற்றது ஹஜ்ஜுப் பெருநாள். ஹிஸ்புல்லாஹ் சொன்னாராம், நாங்கள் வந்தால், ஒன்றை நிப்பாட்டுவோம் என்று. ஹிஸ்புல்லாஹ்வின் தலையை கொஞ்சம் பார்க்க வேண்டும். அது மாத்திரமல்ல. அதன் பின்னர் சொல்கிறார். முஸ்லிம்களுக்கு ஐந்து நேர தொழுகைக்கான இடம் கொடுக்க மாட்டோம் என்றார். அவர்களை நன்றாக பாருங்கள். முஸ்லிம் மக்களை ஏமாற்றி எவ்வாறு கதைக்கின்றார்கள். இந்த இடத்திலேயே நாங்கள் பார்க்கின்ற போது, திஸ்ஸ அத்தநாயக்க என்ன சொல்கிறார் என்றால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அங்கே பெரஹரா நடத்த விட மாட்டோம் என்று கூறுகிறார். அதேபோன்று அவரது மேடைக்கு வந்த சில மதகுருமார் சொல்கின்றார்கள். அவர்களுக்கு நாங்கள் வந்தால் தானம் கிடைக்காது என்று. இது அரசியல் கதையா?, இது அரசியல் விமர்சனமா? இதற்கு நாங்கள் சொல்வது இழிசொல். இதற்கு நாங்கள் சொல்வது பொய் என்று. உண்மையிலேயே மதம் தொடர்பாக கௌரவம் இருக்குமாக இருந்தால், உண்மையிலேயே மதம் தொடர்பாக நாங்கள் சுதந்திரத்தை எதிர்பார்த்தால், அரசியல் மேடைகளிலே சொல்லக்கூடாத விடயங்கள் அவை. இந்த சமயம் தொடர்பான விடயங்களை உசுப்பேத்தி விடுகிறார்கள். எங்களுடைய நாட்டிலே சிங்கள, தமிழ், முஸ்லிம், பேகர் என பல்வேறு இன மக்கள் வாழ்கின்ற நாடு. அதேபோன்றுதான் பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என்ற பல்வேறுபட்ட மதங்களைப் பின்பற்றி வருகின்ற நாடு. தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு பிரதான மொழிகளைப் பேசுகின்ற நாடு. சிங்களவர்களை எடுத்துக் கொண்டால், அவர்களுடைய உரித்தான கலாசாரம் இருக்கின்றது. தமிழ் மக்களுக்கு அவர்களுடைய கலாசாரம். அதேபோன்று முஸ்லிம் மக்களுக்கு அவருடைய கலாசாரத்தைக் கொண்ட நாடாக இருக்கின்றது. ஆகையினால், இந்த நாட்டின் எதிர்காலம் தங்கி இருப்பது, இவ்வாறு பல்வேறுபட்ட, மக்களுக்கிடையிலே ஒற்றுமையை ஏற்படுத்துவதன் மூலமாகத்தான். ஆகையினால், தேசிய மக்கள் சக்தியானது, உங்களுடைய மதத்தைப் பின்பற்றுகின்ற உரிமையை. உங்கள் மொழி உரிமையை. உங்களது கலாசார அடையாளத்தை. ஏற்றுக் கொள்ளக்கூடிய சுதந்திர நாட்டைத்தான் தேசிய மக்கள் சக்தி எதிர்பார்க்கின்றது. ஆனால், ஹிஸ்புல்லாஹ் அதற்கு மாற்றமாக பொய்யைக் கூற முற்பட்டிருக்கின்றார்.
எங்களது தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டிருக்கின்றது. எந்தவொரு மதமாக இருந்தாலும், எந்தவொரு கலாசாரமாக இருந்தாலும், எந்தவொரு மொழியாக இருந்தாலும் இதற்காக அவர்கள் பல்வேறு விடயங்களிலேயே இதனை மாற்றமாகக் கருத்திற் கொண்டால், அதற்கு எதிராக அவர்களுக்கு முறைப்பாடு செய்து தண்டனை வழங்கக்கூடிய ஒரு கொமிஷனை நாங்கள் ஏற்பாடு செய்திருக்கின்றோம்.
அரசியலுக்கு மதம் தொடர்பான வசனங்களை வெளியிடுவது, அதேபோன்று அரசியலுக்கு மதம் தொடர்பான விடயங்களைக் கூறுவது, இவ்வாறு சொல்வதை, செயற்படுத்துவதை நிறுத்துவது தான் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம். எங்களுக்கு தேவைப்படுவது என்னவென்றால், தான் தேசிய ஒற்றுமை உடனான நாடு. அனைவரும் சகோதரத்துடன் வாழக்கூடிய நாடு. எல்லோரும் ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு நாடு. ஆகையால்தான் உங்களை நாங்கள் சந்திக்க வந்திருக்கின்றோம்.
செப்டம்பர் 21ஆம் திகதி நாங்கள் வெல்ல வேண்டும். தெற்கிலே வாழுகின்ற மக்களுடைய நம்பிக்கை மட்டுமல்ல, கிழக்கிலே வாழுகின்ற உங்களுடைய நம்பிக்கையும் எங்களுக்குத் தேவைப்படுகின்றது. நீங்கள் அதற்குத் தயாரா? இலங்கையில் முதல் முறையாக நாங்கள் ஏற்படுத்துவோம். தெற்கு மக்களாக இருந்தாலும், கிழக்கு மக்களாக இருந்தாலும், வடக்கு மக்களாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசாங்கம் ஒன்றை சிங்கள, தமிழ், முஸ்லிம் எல்லா மக்களினதும் நம்பிக்கையை வென்ற ஓர் அரசாங்கமாக நாங்கள் ஏற்படுத்தப் போகின்றோம்.
உங்களுக்கு தெரியும் இங்கே ஏற்கனவே அரசியல் கட்சிகள் வருவது சஜித் வருவது ஹக்கீமை தோலில் வைத்துக் கொண்டு. ரணில் வருவது அதாவுல்லாஹ்வை தோலில் வைத்துக் கொண்டு. நாங்கள் வருவது பொதுமக்களே உங்களது நம்பிக்கையை தோலில் வைத்துக் கொண்டு. இவ்வாறான ஒற்றுமையான செயற்பாடு ஆரம்பித்து இருக்கின்றது. தமிழ் மக்கள்,சிங்கள மக்கள், முஸ்லிம் மக்கள் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு கட்சி. தலைவர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சி அல்ல. பொதுமக்களாகச் சேர்ந்த ஒரு செயற்றிட்டம். இதுதான் தேசிய மக்கள் சக்தி. இந்த இடத்திலே ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் இருக்கின்றீர்கள். இதில் சகோதரிகள் இருக்கிறார்கள். சகோதரர்கள் இருக்கின்றார்கள். நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து என்ன சொல்கின்றீர்கள்? நாங்கள் தயார். உங்களது நம்பிக்கையை வெற்றி கொள்வதற்காக. அப்படித்தானே?
நான் உங்களுக்கு ஓர் உறுதிமொழி வழங்குகின்றேன். நீங்கள் என் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையை ஆகக் குறைந்தது ஒரு சிறு துளியாவது உடைக்க மாட்டோம். அதனைப் பாதுகாப்போம்.
உங்களுக்குத் தெரியும். 2015 இல் மஹிந்த ராஜபக்ச தோல்வி அடைந்தார். அவர்கள் மீண்டும் தங்களது அரசியலுக்குள் வருவதற்காக ஒரு வீதியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மீண்டும் களவை பிடிக்க மாட்டோம் என்று. மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது. ஜனநாயகத்தை நாங்கள் உருவாக்கப் போகிறோம் என்று 2015க்குப் பின்னர் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது. 2018 க்கு பின்னர் நாட்டு மக்களின் பிரச்சினையை தீர்க்க போகிறோம் என்று அவர்கள் ஆட்சியைப் பிடிக்க முடியாது. ஆகையினால் அவர்கள் தங்களுக்குள்ளே ஒரு வரைபடத்தை வரைந்தார்கள். அந்த வரைபடம் தான் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாதம் ஒன்றைக் கிளப்பி விட்டார்கள். அம்பாறையில் இருக்கின்றவர் கொத்து தயாரிக்கின்றார். அது கருத்தடை கொத்து என்று சொன்னார்கள். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக இனவாதத்தை விதைத்தார்கள். முஸ்லிம் கடைகளில் விற்கப்படுகின்ற ஆடைகள் கருத்தடை ஆடைகள். அவற்றை நாங்கள் அணிந்தால் கருத்தடை ஏற்படும் என்று சொன்னார்கள். இவ்வாறு இனவாதத்தை கிளப்பி விட்டார்கள்.
அதேபோல தான் கருத்தடை வைத்தியர்கள் இருப்பதாக சொன்னார்கள். சிங்கள பெண்களை அவர்கள் கருத்தடைக்கு உட்படுத்தியதாகச் சொன்னார்கள். இவ்வாறு
இனவாதத்தை கிளப்பி விட்டார்கள். இவ்வாறு இனவாதத்தை கிளப்பி,
2019 இலே கோட்டாபய சொன்னார். எங்களது இனத்தை பாதுகாப்பதற்காக, மதத்தை பாதுகாப்பதற்காக கோட்டாவை வெற்றி பெறச் செய்வது என்று சொன்னார்கள். இவ்வாறு சிங்கள மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வெற்றி பெற வைத்தார்கள். இப்பொழுது அந்த மொட்டு எங்கே? அந்த மொட்டுதான் தான் கொரோனா நோய் வருகின்றபோது, முஸ்லிம் மக்கள் இறக்கின்ற போது, அவர்களுடைய ஜனாஸாக்களை அடக்கம் செய்யாமல் எரித்தார்கள்.
இது யாருடைய அரசாங்கம். மொட்டுவினுடைய அரசாங்கம். இப்போது எங்கே அந்த மொட்டு?
இந்த மொட்டுவின் அதிகமானவர்கள் இப்போது ரணில் விக்கிரமசிங்க பக்கம் இருக்கிறார்கள். அன்று இனவாதத்தை விதைத்த மொட்டு. நல்லடக்கம் செய்ய விடாமல் எரித்த மொட்டானது இன்று இருப்பது ரணில் விக்கிரமசிங்கவுடன்.
இன்று மொட்டுவின் தலைவர் யார் என்றால் ரணில். மற்றவர் யாரோடு இருக்கின்றார்கள் மொட்டுக் கட்சிகளின் தலைவர் ஜி.எல்.பிரீஸ். அவர்கள் இனவாதத்தை விதைத்தவர்கள். முஸ்லிம் மக்களுடைய உடலை எரிக்க வேண்டும் என்று முடிவு கண்டபோது கெபினட்டிலே இருந்தவர் எங்கே இருக்கின்றார்?
அதேபோன்று தான் முஸ்லிம் மக்களுடைய உடல்கள் எரிக்கப்பட வேண்டும் என்று சொன்ன அமைச்சர் அழகப் பெரும சஜித் பிரேமதாச பக்கம் இருந்து கொண்டிருக்கிறார். அதேபோன்றுதான் முஸ்லிம் உடல்களை எரிக்க வேண்டும் என்று சொன்ன நாலக கொடஹேவா போன்றவர்கள் சஜித் பிரேமதாஸவோடு இருக்கிறார்கள். இவ்வாறு இனவாதத்தை விதைத்தவர்கள் எல்லாம் அவர்களோடு இருக்கின்றார்கள். ஆகையினால், நீங்கள் ரணிலைப் பார்த்தாலும் அந்த இடத்திலே மொட்டின் ஓர் இலை இருக்கின்றது. சஜித்தைப் பார்த்தாலும் இனவாதத்தை விதைத்த அந்தக் கூட்டம் சஜித்தோடு இருக்கின்றது. இவ்வாறு இனவாதத்தில் விழாத ஒரேயொரு செயற்றிட்டம் தேசிய மக்கள் சக்தி மாத்திரம் தான்.
யாரைத் தேர்ந்தெடுப்பது?
உங்களிடம் நான் கேட்கிறேன் யாரை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்? தேர்ந்தெடுக்க வேண்டும் நீங்கள்? தேசிய மக்கள் சக்தியைத்தான்.
அது மாத்திரமல்லாமல் எங்களுடைய அரசியலானது மிகவும் மோசமான சூதாக இருக்கின்றது. அந்தப் பக்கம் இருக்கிறவர் இந்த பக்கம் பார்க்கிறார். இந்தப் பக்கம் இருக்கின்றவர் அந்தப் பக்கம் பார்க்கின்றார்.
இப்போது அதாவுல்லாஹ் எந்த பக்கம்?
என்ன நடந்திருக்கிறது? அங்கும் இங்கும் பாய்கின்ற அரசியலை நாங்கள் மாற்றத் தேவையில்லையா? எங்கள் நாடு விழுந்ததற்கு காரணம் இவ்வாறு அரசியல்வாதிகள் மாறி மாறி ஒவ்வொரு கட்சிக்கு தாவி ஒரு மாதத்துக்கு முதல் ஏசுவார். அடுத்த மாதத்தில் அவரை கட்டிப் பிடித்துக் கொள்வார். என்ன அரசியலில் இது. இதை மாற்றத் தேவையில்லையா? பாய்கின்ற இந்த அரசியலை மாற்ற வேண்டும்.
கீதாவின் அரசியலைப் பாருங்கள். போன கிழமை சொன்னார் ரணில்தான் நல்ல டொப் என்று. இந்த வாரம் சொல்கிறார் சஜித்தான் நல்ல டொப் என்று. போற ஆட்களுக்கு வெட்கமும் இல்லை; எடுக்கிற ஆட்களுக்கு வெட்கமும் இல்லை. இவ்வாறான அரசியலை நாங்கள் மாற்றத் தேவையில்லையா?
இப்போது நீங்கள் பாருங்கள். சம்பிக ரணவக்க. அவர்தான் பொது பல சேனா மஹரகம மேடையில் ஏறியவர். இப்போது சம்பிக ரணவக்க யாரோடு? சஜித் பிரேமதாஸ பக்கம்.
றிஷாத் பதியுதீன் சஜித் பிரேமதாஸ பக்கம். என்ன நடக்கும் தெரியுமா? சஜித் பிரேமதாச கிழக்குக்கு வருகின்றபோது ஹக்கீமை போட்டுக் கொண்டு வருவார். சம்பிகவை ஒழித்து வைப்பார். சம்பிக வந்தாரா? எப்போதாவது கிழக்குக்கு வந்திருக்கிறாரா? கிழக்குக்குவரும்போது சம்பிகவை ஒழித்து வைத்துவிட்டு வருவார். மாத்தறைக்குச் செல்கின்ற போது ஹக்கீமை ஒழித்து வைத்துவிட்டு சம்பிகவை எடுத்துக் கொண்டு போவார். என்ன அரசியல் இது? நல்ல அரசியலா இது? மன்னாருக்குப் போகின்ற போது றிஸாத் பதியுதீனைக் கூட்டிக் கொண்டு போவார். சம்பிகவை ஒழித்து வைத்து விடுவார். காலிக்குப் போகின்ற போது றிஸாத் பதியுதீனை ஒழித்து வைத்து வடுவார். சம்பிகவைக் கூட்டிக் கொண்டு போவார். என்ன அரசியல் இது? கொள்கை ரீதியான அரசியலா இது? வடக்குக்குச் சென்றாலும் ஒரே கதை தான். தெற்கு சென்றாலும் ஒரே கதை தான். கிழக்குக்கு வந்தாலும் ஒரே கதை தான் ஒரேயொரு செயற்றிட்டம் தேசிய மக்கள் சக்தி மாத்திரம் தான்.
நாங்கள் இந்த விளையாட்டை இதுபோன்று பேப்பரை ஒழித்து வைத்துவிட்டு விளையாட மாட்டோம். அவர்கள் கடதாசிகளை மறைத்து வைத்து விளையாடி விட்டார்கள். சம்பிகட பேப்பரை கிழக்குக்கு மறைப்பார்.
திலங்க சுமதிபலவின் பேப்பரை மறைப்பார் கிழக்குக்கு வருகின்ற போது. தெற்கு வருகின்ற போது ஹக்கீம், றிஸாதுடைய பேப்பரை மறைத்து விடுவார். இதுவே போதும் இவர்களைத் தோற்கடிப்பதற்கு.
ஆகையினால், செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி எல்லோரும் ஒரு முடிவை எடுக்க வேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்து அரசாங்கம் ஒன்றை உருவாக்குவோம். நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையை நாங்கள் பாதுகாப்போம். நாங்கள் இந்த நாட்டைக் கட்டி எழுப்ப ஆரம்பிப்போம். செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி தேர்தல். நிச்சயமாக வெற்றி பெறுவோம். 22 பாராளுமன்றத்தை கலைப்போம். அதன் பின்னர் கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் செல்லும் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு..
நாட்டில் உள்ள மக்கள் நிச்சயமாக இந்த பாராளுமன்றத்தில் இருக்கின்ற மூன்றில் இரண்டு பங்கை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். இவர்களை அனுப்பத் தேவையில்லையா?
கொச்சிக்காய்த்தூள் கொண்டு வரும் அமைச்சர்கள் இருக்கின்றார்கள். கத்தி எடுத்துக் கொண்டு வருகின்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். புத்தகத்தை அங்கெங்குமாக வீசுகின்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.
பார் அனுமதிப் பத்திரம் எடுப்பதற்காக
அவர்களது பக்கத்தை மாறுகின்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அங்கு சபையின் மத்தியிலே அடித்துக் கொள்கின்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.
கப்பம் பெற்றுக்கொண்டு நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்ட பிரசன்ன ரணதுங்கவும் பாராளுமன்றத்தில் இருக்கின்றார். அங்கும் இங்கும் பாய்கின்ற நிறையப் பேர் இருக்கின்றார்கள். இந்தப் பாராளுமன்றத்தை நாங்கள் சுத்தப்படுத்த தேவையில்லையா? கொள்கை இருக்கின்ற மக்களிடத்திலே, களவு எடுக்காத மக்களிடத்திலே, உண்மையான மக்களைக் கொண்டவர்களாக இந்த பாராளுமன்றத்தை நாங்கள் நிரப்ப வேண்டும். நீங்கள் இதற்குத் தயாரா? அதன் பின்னர் நாங்கள் ஓர் அமைச்சரவையை உருவாக்குவோம். நாங்கள் நாட்டுக்குத் தேவைப்படுகின்ற முக்கியமான முடிவுகள் பலவற்றை எடுப்போம். இந்த அரசியல்வாதிகளுக்கு பகிர்ந்து கொள்வதற்காக அல்ல. நாங்கள் வருவது கை விடுவதற்காக. அண்மைக்காலத்தில் பெட்ரோலின் விலைகள் உயர்ந்தது. பாராளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த எரிபொருள் செலவை ஒரு லட்சமாக உயர்த்தினார்கள். நாங்கள் மட்டும்தான் அதனை எடுக்கவில்லை. எங்களுக்கு எரிபொருள் வரிசை இருந்தது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வரிசையில் நிற்காமல் தனியாக எரிபொருள் நிரப்பும் நிலையத்தை உருவாக்கினார்கள். நாங்கள் அந்த எரிபொருள் நிலையத்துக்குச் சென்று எரிபொருள் அடிக்கவில்லை.
மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகள், மற்றும்
சிறியதொரு காரைக் கூட இறக்க முடியாது. ஆனால், ரணில் விக்கிரமசிங்கை சந்தித்து மரைக்கார் சொல்லுகிறார். கார் அனுமதிப் பத்திரம் தாருங்கள் என்று. நீங்களும் கண்டீர்கள் தானே? அவர்கள் தங்களுக்குள்ளே பகிர்ந்து கொள்ளத்தான் இருக்கிறார்கள். நாங்கள் ஓர் அரசை உருவாக்குவோம். நாங்கள் எங்களுக்குள்ளே பகிர்ந்து கொள்வதற்காக அல்ல. கை விடுவதற்காக.
இவ்வாறு தான் எங்களது அமைச்சரவை முடிவு.
முதலாவது பாராளுமன்ற உறுப்பினருடைய ஓய்வூதியம் இல்லாமல் ஆக்கப்படும். நல்லது தானே? அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுகின்ற வாகன அனுமதிப் பத்திரத்தை இல்லாமல் செய்வோம். அமைச்சர்கள் ஆகக் கூடுதலாக 25 பேர்தான். அங்கே இராஜாங்க அமைச்சர் என்றதொரு பதவி இல்லை. பிரதி அமைச்சர்கள் அமைச்சர்களுக்கு சமமாக இருப்பார்கள். அமைச்சர்களுக்கு பின்னால் ஏழு எட்டு வாகனங்கள் செல்ல முடியாது. அமைச்சர்களுக்கு அரசாங்கத்தினால் வீடுகள் வழங்கப்படாது. அமைச்சர்களுக்கு தண்ணீர்க் கட்டணம், மின்சாரக் கட்டணங்களை அரசாங்கம் செலுத்தாது. அதேபோலத்தன் ஜனாதிபதியுடைய ஓய்வூதியம்
இரத்து செய்யப்படும். முன்னாள் ஜனாதிபதிகளை அரசாங்கத்தினால் கவனித்துக் கொள்வது நிறுத்தப்படும். ஜனாதிபதிக்காக நாடு முழுவதும் இடம் இருக்கின்றது. இந்த இடங்களை எல்லாம் நாங்கள் ரத்து செய்வோம். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு தேவையாக இருந்தால், பாதுகாப்பு தேவையான ஏதாவது நிலை இருந்தால் மாத்திரம் தான் பொலிஸ் அதிகாரிகள் வழங்குவோம். அமைச்சருடைய காரின் கதவை திறப்பதற்கும் அவருடைய மனைவிக்கு குடை பிடிப்பதற்கு இதற்காக பொலிஸ் தர மாட்டோம். இவ்வாறு நாங்கள் நாட்டை கட்டி எழுப்பத் தேவையில்லையா? நான் 24 வருடங்களாக பாராளுமன்றத்தில் இருக்கிறேன். ஒரு நாளும் பொலிஸ் உத்தியோகத்தரை நான் பாதுகாப்புக்காக எடுத்ததில்லை. பொலிஸ் இருக்கிறது அவர்கள் நாட்டை பாதுகாப்பதற்கு.
பொதுமக்களுடைய பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு. அப்போது நாங்களும் பாதுகாக்கப்பட்டுக் கொள்வோம். இவர்கள் இவ்வாறு செய்யவில்லை. நாட்டின் பாதுகாப்பு இல்லாமல் செய்து, அவர்களுடைய பாதுகாப்புக்காக பொலிஸை எடுத்துக் கொள்கிறார்கள். நாங்கள் அவ்வாறு செய்ய மாட்டோம். எங்களுடைய நாட்டிலே சட்டத்தையும் சமாதானத்தையும் பாதுகாப்போம். எங்களது நாட்டிலே நாங்கள் சாதாரணமாக சொல்லுகின்ற குடு இப்போது நிறைய வியாபத்து இருக்கின்றது. எங்களுடைய நாட்டிலே 10, 15 வருடங்களுக்கு முன்னர் குடு இருந்ததா? இது அத்தனையும் கொண்டு வருவது இந்த அரசியல்வாதிகள். உங்களுக்கு தெரியும். கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அகப்பட்டார். அவருடைய வாகனத்தில் இருந்தது எட்டு கிலோ. பாராளுமன்ற உறுப்பினருடைய வாகனத்தில் தான் அந்த குடுவைக் கொண்டு செல்வார்கள். அதே போன்று தான் கஞ்சா அகப்பட்டது அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருடைய வாகனத்தில் இருந்து. கேகாலை மாகாண முதலமைச்சராக இருக்கின்ற மஹிபால ஹேரத்துடைய வாகனத்தில் இருந்தது கஞ்சா. அதன் கருத்து என்னவென்றால், குடு விநியோகிப்பது அவர்கள்தான்.
இந்த நாளிலே நீங்க கண்டீர்களோ தெரியாது. ரூபவாஹினி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஒரே கட்சியில் இருந்த இருவர். வேலு குமார் ரணிலுக்கு ஆதரவளித்தார். திகாம்பரம் சஜித்துக்கு ஆதரவளித்தார். இருவரும் ஒரே கட்சியில் இருந்து பாராளுமன்றத்துக்கு வந்தவர்கள். ஒரே கட்சியில் இருந்தவர்கள். அந்த தொலைக்காட்சி விவாதத்தில் என்ன சொன்னார்கள்.
திகாம்பரம் வேலு குமாரைப் பார்த்து பார் குமார் என்றார். சொல்லலியா அப்படி? சொன்னதுதானே?
வேலு குமார் திகாம்பரத்தை பார்த்து கூறுகிறார் குடு திகா என்று கூறுகிறார்.
இதன் கருத்து என்ன? அவர் பார் எடுக்கிறார். இவர் குடு விற்கிறார். இதைத்தான் சொல்கிறார்கள் அவர்கள். ஆகையினால், யார் இதனைச் செய்வது அரசியல்வாதிகள். ஆகையினால், அவர்கள் நிவாரண பணத்தைச் செலவழிப்பது யார் என்றால், குடு விற்கின்ற வியாபாரிகளின் காசு. ஆகையினால், எங்களுடைய நாட்டிலே சட்டத்தையும் சமாதானத்தையும் நாங்கள் பாதுகாக்க வேண்டும். இந்த குடு வியாபாரத்தை நாங்கள் எமது நாட்டில் இருந்து இல்லாதொழிக்க வேண்டும். செய்யத் தேவையில்லையா?? இதற்காக தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் நாங்கள் குடு வியாபாரிகளுக்கு கடனும் இல்லை பயமும் இல்லை. இந்த நாட்டை இவ்வாறு தான் கட்டி எழுப்ப வேண்டும். இதற்காகத்தான் நாங்கள் அதிகாரத்தை கேட்கின்றோம். எங்களுடைய நாட்டிலே பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப வேண்டும். இவர்கள் ஒருபோதும் எங்களுடைய நாட்டிலே உற்பத்தியை அதிகரிக்கவில்லை. அவர்கள் கொண்டுவந்து விற்பதற்குத்தான் விருப்பமாக இருக்கின்றார்கள். என்ன அவர்கள் கொண்டு வராமல் இருக்கின்றார்கள். எங்களுடைய மாத்திரைகளைப் பார்த்தால் அது இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படுகிறது.
ஆடைகள் அங்கிருந்துதான் கொண்டுவரப்படுகின்றது. முட்டைகள் கொண்டு வரப்படுகிறது. அதேபோன்றுதான் வெங்காயம். விதைகளைக் கொண்டு வருகிறார்கள். என்ன ஆட்சியாளர்கள் இவர்கள்..? வெங்காயம் கொண்டு வருவதும் அங்கிருந்துதான். கருவாடு கொண்டு வருகிறார்கள் மாலையில் இருந்து. அதேபோன்று கௌபி, உளுந்து, பயந்து எடுத்து வருகிறார்கள். இவர்கள் நாட்டை கட்டி எழுப்பவில்லை. அவர்கள் விருப்பம் எதற்கு என்றால் வெளிநாடுகளில் இருந்து ஏனென்றால், இறக்குமதி செய்தால் அவர்களுக்கு கொமிஷன் வரும். ஒரு முட்டை இந்தியாவிலிருந்து வருவதற்கு கொமிஷன் எவ்வளவு என்றால், எட்டு ரூபாய் . ஒரு கோடி முட்டை கொண்டு வந்தால் இலாபம் எட்டுக் கோடியாக இருக்கின்றது. நல்லது என்றால் நாட்டுக்கு நல்லது. இவ்வாறு நாங்கள் உற்பத்தி செய்தால் நாட்டுக்கு நல்லது. இறக்குமதி செய்தால் அமைச்சருக்கு நல்லது அப்படித்தானே! அதேபோன்றுதான் மாத்திரைகள் இறக்குமதி செய்யும்போது களவெடுக்கிறார். கீழ்த்தரமான மாத்திரைகளைக் கொண்டு வருகிறார்கள். அதனை இறக்குமதி செய்யும் போது அமைச்சருக்கு இதை உற்பத்தி செய்தால் நாட்டுக்கு நல்லம். சீனியை இறக்குமதி செய்கின்ற போது 1500 கோடி இவர்கள் அடித்தார்கள். அதை இறக்குமதி செய்தால் அமைச்சருக்கு நல்லது. இதனை உற்பத்தி செய்தால் மக்களுக்கு நல்லது.
ஆகையினால், என்ன செய்ய வேண்டும். உற்பத்தி செய்யக்கூடிய. தயாரிக்கக்கூடிய எல்லாவற்றையும் மீண்டும் இலங்கையிலே
நாங்கள் ஆரம்பிக்க வேண்டும். நாட்டைப்போன்று எட்டு மடங்கு கடலில் இருக்கின்றது. அதில் அதிகளமான மீன்கள் இருக்கின்றது. இதனை பிடிப்பதற்காக நாங்கள் முயற்சிகளை வேண்டும்.
இப்போது இருக்கின்ற பெட்ரோலுடைய விலையில் எரிபொருள் அடித்துக்கொண்டு உணவையும் எடுத்துக்கொண்டு அங்கே நிற்பது மிகவும் குறைவு. ஏனென்றால், கடலில் சென்று 40 நாட்கள் இருந்து வந்தால் நஷ்டம் அதற்காக நாங்கள் எரிபொருள் நிவாரணம் ஒன்றை வழங்க இருக்கின்றோம்.
கரையில் இருக்கின்ற சகல படகுகளும் அங்கு சென்று மீன் பிடிப்பதற்காக நாங்கள் எரிபொருளை வழங்குவோம். இங்கே படகுகள் கரையிலிருந்து வேலையில்லை. ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதாரம் படகுகள் கரையிலே; கருவாடு மாலைதீவில் இருந்து.
எங்களுடைய மீனுக்கு வாக்குகள் இருந்தாலும் ரணில் இடம் கொடுக்காது. ஆகையினால், இதற்காக நாங்கள் உங்களுக்கு நிவாரணம் வழங்குவோம் நீங்கள் சென்று மீன் பிடிப்பதற்காக. நான் பலமுறை இங்கு வந்து பார்த்திருக்கிறேன். கடல் அடித்துக் கொண்டு கரைக்கு வருகின்றது. ஏராளமான கட்டிடங்கள், தென்னந் தோட்டங்கள் எல்லாம். அதற்காக எங்களது கரையோரத்தை பாதுகாப்பதற்காக இதற்கான திட்டங்களை ஆரம்பத்திலேயே எடுக்க வேண்டும். அதேபோன்றுதான் கப்பலை கொண்டு வருவதற்காக துறைமுகம் ஒன்றைக் கட்டினார்கள். அதில் மீன்பிடி படகு கூட செல்ல முடியாது. இவ்வாறு அனைத்தையும் நாங்கள் மாற்றீடு செய்ய வேண்டி இருக்கின்றது. இந்தப் பக்கத்திலே வாழுகின்ற மீனவ மக்களுக்காக, அவர்களுக்கு வசதி ஏற்படுத்துவோம். அதேபோன்றுதான், விவசாயிகளுக்கு நீங்கள் விவசாயத்தை ஆரம்பியுங்கள். எந்தவொரு வயலையும் நீங்கள் சும்மா விட வேண்டாம். இதற்காக அரசாங்கம் உங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும். எங்களுடைய சுற்றுலாத்துறைக்கு தேவைப்படுகின்ற அரிசியைத் தவிர வேறு எந்த அரசியையும் நாங்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வர மாட்டோம்.
ஆகையினால், என்ன செய்ய வேண்டும். இந்த நாட்டைக் கட்டி எழுப்ப நாங்கள் அனைவரும் ஒன்று சேர்வோம்.
இந்த செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி ஆரம்பிப்பது ஒரு தலைவரை இல்லாமலாக்கி இன்னொரு தலைவரை கொண்டு வருவதற்காக அல்ல; ஓர் அரசாங்கத்தை இல்லாமல் செய்து இன்னொரு அரசாங்கத்தைக் கொண்டு வருவதற்காக அல்ல. இந்த நாட்டை வீழ்ச்சி அடையச் செய்த குழுவை இல்லாமல் ஆக்க வேண்டும். இந்த நாட்டைக் கட்டி எழுப்பக்கூடிய குழுவுக்கு அனைவரும் சேர்ந்து எங்களது நாட்டை கட்டி எழுப்புவோம். இங்கு இருக்கின்ற சிறுபிள்ளைகள் அந்தப் பிள்ளையை விட்டு விட்டு அந்த இளைஞர் வெளிநாடு தொழிலைத் தேடுவதற்காக வெளிநாடு செல்கிறார். அல்லது அவ்வாறு இல்லாமல் அதுவும் மாறி நடக்கின்றது. அந்தப் பிள்ளை வெளிநாடு செல்கின்றது. என்ன நடக்கின்றது. அதாவது ஒரு நாட்டை வைத்திருக்கின்றார்கள். அது தொழிலைத் தேட முடியாத நாடாக இருக்கின்றது. அதேபோன்றுதான் பிள்ளைகளுக்கு கல்வி இல்லாத நாடாக இருக்கின்றது.
இந்த நாட்டை முழுவதுமாக இந்த ஆட்சியாளர்கள்தான் நாசமாக்கினார்கள். ஆகையினால், இப்போதாவது நாங்கள் இதனைக் கட்டி எழுப்ப வேண்டும்.
எனவே, செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி தேசிய மக்கள் கட்சியை வெற்றி பெறச் செய்வோம். நாட்டைக் கட்டி எழுப்பக்கூடிய அரசாங்கத்தை உருவாக்குவோம். திருட்டை இல்லாமல் செய்கின்ற அரசாங்கத்தை உருவாக்குவோம். தேவையில்லையா அப்படி? களவெடுத்தவர்களுக்கு தண்டனை வழங்கக் கூடிய ஓர் அரசாங்கத்தை, அதேபோன்று களவெடுத்த சொத்துக்களை மீண்டும் எடுத்துக் கொள்ளக் கூடிய ஓர் அரசாங்கத்தை அவ்வாறானதொரு அரசாங்கத்தை நாங்கள் உருவாக்க வேண்டும். நீங்கள் பின்பற்றுகின்ற மதத்தின் பிரகாரம் உங்களுக்கு இந்த திருட்டை இல்லாமல் செய்யாது போனால் அல்லது அதனை நீங்கள் நிற்பாட்டுவதற்கு உதவி செய்தால், உங்களால் ஊழல் செய்த ஒருவரை நிறுத்த முடியுமா? உங்களுக்கு முடியுமா? மத்திய வங்கியில் செய்த அந்த ஊழலை நிறுத்த முடியுமா? அதேபோன்றுதான் உங்களால் முடியுமா?
ஆகையினால், நீங்கள் என்ன செய்ய வேண்டும்? திருட்டை இல்லாமல் செய்கின்ற குழுவிற்கு வழங்க வேண்டும். அவர்கள் களவெடுத்தவர்கள். நாங்கள் களவை நிறுத்த வருகின்றோம். அவர்களுக்கு வாக்களிப்பதென்பது திருட்டுக்கு நாங்கள் ஒத்துழைப்பதாகும்.
தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பதென்பது திருட்டை நிறுத்துவதற்காக அளிக்கின்ற ஒத்துழைப்பாக இருக்கும்.
ஆகையினால், யாருக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்? தேசிய மக்கள் சக்திக்கு! ஆம்! அதற்காக நாங்கள் அனைவரும் ஒன்று சேர்வோம். அதற்காக நாங்கள் அனைவரும் வேலை செய்வோம்.
செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நாங்கள் நல்லதொரு முடிவை எடுப்போம். அதற்காக அனைவரும் ஒன்று சேருங்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்! என்றும் தெரிவித்தார்.