சீரழிந்து குட்டிச்சுவராகியுள்ள எமது நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கு அனுபவமுள்ள ஜனாதிபதி ஒருவரே பொருத்தமானவரென அபிவிருத்தி திட்ட அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.
தற்போதைய தேர்தல் களத்திலுள்ள சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திசாநாயக்க போன்றவர்கள் நாட்டை ஆளக்கூடிய அனுபவமற்றவர்கள் என்றும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு – ஏறாவூர் அல்ஜுப்ரிய்யா தேர்தல் வட்டாரத்தில் ….. சமூக சேவகரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் வேட்பாளருமான ரஜாய் நசீர் தலைமையில் ( 15.09.2024 ) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றகையிலேயே அலி ஸாஹிர் மௌலானா இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதித்தேர்தல் சுயேச்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்கவை ஆதரித்து இம்மக்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. முக்கியஸ்தர்கள் பலர் இங்கு உரையாற்றினர்.
இங்கு அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா மேலும் பேசுகையில்- முன்னணி வேட்பாளர்களான ரணில் விக்ரம சிங்க மற்றும் சஜித் பிரேமதாச போன்றவர்கள் தமது குடும்ப சகிதம் மக்களுக்கு முன்னாள் வருகின்றனர். அதுபோன்று அனுரகுமார திசாநாயக்கவுக்கு காட்சியளிக்க முடியுமா என்பதை நான் சவாலாக விடுகின்றேன்.
எனவே தமது சொந்த குடுமபத்தையே சீராக நிருவகித்துக்கொள்ள முடியாதவரை நம்பி இந்த நாட்டினை எவ்வாறு ஒப்படைக்க முடியும் என்பது சவாலாக உள்ளது. இதனைப்பற்றி எமது இளைஞர் யுவதிகளுக்குத் தெரியாதுள்ளது.
அதேபோன்று ரணில் விக்ரமசிங்கவுடன் பல சிறுபான்மைக்கட்சிகள் அதேபோன்று தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகள் கூட்டிணைந்துள்ளார்கள். சஜித் பிரேமதாசவுடனும் சிறுபான்மை இனங்களின் பிரதிநிதிகள் பலர் கூட்டிணைந்து வேலைத்திட்டங்களைச் செய்கின்றார்கள். ஆனால் அனுரகுமாரவுடன் சிறுபான்மை இனங்களின் பிரதிநிதிகள் இல்லாதிருப்பது ஆபத்தானது. தப்பித்தவறி ஆட்சியமைத்தால் அந்த ஆட்சியில் சிறுபான்மைச் சமூகத்திற்கு நடைபெறும் அநீதிகளைத்தட்டிக்கேட்பதற்கு எவருமே இல்லை.
அதேபோல முஸ்லிம் சமூகத்தில் செல்வாக்குப்பெற்றுள்ள முஸ்லிம் காங்கிரசும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் சஜித் பிரேமதாசவுடன் இணைந்துள்ளனர். நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சஜித் பிரேமதாச அணியினர் எதிர்க்கட்சிக்கு வரும்பட்சத்தில் முஸ்லிம் சமூகம் திட்டமிட்டு புறக்கணிக்கப்படலாம். கோட்டாபய ராஜபக்ச காலத்திலும் இவ்வாறு நடைபெற்றமை சிறந்தபாடமாகவுள்ளது. எனவே சீரழிந்த ஓரளவு நாட்டைக் கட்யெப்பியுள்ள ரணில் விக்ரம சிங்கவை ஆதரித்து எமக்கான உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொள்வோம் என்றார்.