கந்தளாய் சோழீசுவரம் ஆலய மகோற்சவத்தில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன்

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாயில் பிரசித்தி பெற்ற சோழீசுவரம் சிவன் ஆலயத்தில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் கலந்து கொண்டார் .

திருகோணமலை மாவட்டத்தில் சதுர்வேதி மங்களபுரம் என புராதன பெயரைக் கொண்ட கந்தளாய் என தற்போது அழைக்கப்படும் ஊரில் சோழ மன்னர்கள்
ஆட்சியில் சோழீசுவரம் எனும் பெயருடன் சிவன் அருள்பாலிக்கும் சிவாலயம் கட்டுவிக்கப்பட்டு முறைப்படி
கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டு இப்போது ஊர்மக்களினால் பன்னிரெண்டு நாட்களை கொண்ட வருடாந்த மகோற்சவம் நடாத்தப்பட்டு வருகிறது .
இதன் ஒரு அங்கமாக ஒன்பதாம் நாள் திருவிழாவாக சப்பரத் திருவிழா 13.09.2024 அன்று நடைபெற்றது . இப்புதிய சப்பரத்திற்கான நிதியை பன்முகபடுத்தப்பட்ட நிதியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் ஒதிக்கியது குறிப்பிடத்தக்கது.