கொக்கட்டிச்சோலை முதலைக்குடாவில் சஜித் பிரேமதாசாவின் தேர்தல் பிரச்சார அலுவலகம் திறந்து வைப்பு!

ஜனாதிபதி வேட்பாளரும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவருமான சஜித் பிரேமதாசாவின் தேர்தல் பிரச்சார அலுவலகம் கொக்கட்டிச்சோலை முதலைக்குடாவில் நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது .

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான சோ. கணேசமூர்த்தி அலுவலகத்தை நாடா வெட்டி திறந்து வைத்தார் .

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பட்டிப்பளை பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளரும் அதிபருமான சிவ.அகிலேஸ்வரன் தலைமையில் திறப்பு விழா இடம் பெற்றது.

விழாவில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரச்சார செயலாளர் வெ.சுதாகரன் உள்ளிட்ட ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.