மட்டக்களப்பில் சித்திரப் போட்டியும் காட்சிப்படுத்தலும்.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

இளையோர் வளர்ந்தோர் ஒன்றிணைத்து பங்குபெறும் சித்திரப்போட்டியும் காட்சிப்படுத்தலும் இலங்கை தேசிய சமாதானப் பேரவை மற்றும் எகட் ஹரித்தாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று (12) திகதி இடம் பெற்றது.

கலை வழியாய் சமாதானம் வளர்ப்போம் சமூகத்தில் சுதந்திரம் சமாதானம் சகவாழ்வு போன்ற உயரிய பண்புகளை மையப்படுத்தி சித்திரங்கள் வாயிலாக பிரிதிபலிப்போம் எனும் தொணிப்பொருளில் இந் நிகழ்வு இடம் பெற்றது.

செங்கலடி பிரதேச செயலகபிரிவிற்குட்பட்ட மக்களிடம் சகோதரத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் இவ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

இதன் போது வரையப்பட்ட கண்கவர் ஓவியங்கள் காந்திப்பூக்காவில் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் ஏகட் ஹரித்தாஸ் நிறுவன இயக்குனர் அருட்தந்தை எஸ்.எல். ஜெய நிக்சன் அடிகளார், இலங்கை சமாதான பேரவையின் கண்காணிப்பிற்கும் மதிப்பாய்விற்குமான உத்தியோகத்தர் என்.கிரிஸ்ணகுமார், வண்ணாத்து பூச்சி பூங்கா நிறுவனத்தின் வளவாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.