தமிழ் பொது வேட்பாளருக்கு
ஆதரவு தெரிவிக்கும் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை –
ஈரோஸ் ஜனநாயக முன்னணி
தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் எந்த நிலைப்பாட்டையும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி எடுக்கவில்லை என
ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஊடகப்பிரிவு
தமிழ் பொது வேட்பாளர் விவகாரம் தொடர்பில் இன்று 12.09.2024 வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோஸ் ஜனநாயக முன்னணி இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும் இக்கட்சி ஈரோஸ் அமைப்பின் வழிவந்த உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டதாகும் .
இந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் பொது வேட்பாளரோ அல்லது தமிழ் பொது கட்டமைப்போ ஈரோஸ் ஜனநாயக முன்னணியோடு பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு எந்த ஆர்வமும் காட்டவில்லை எமது கட்சியானது ஒருபிராந்தியத்தை மையப்படுத்தி செயற்படும் அமைப்பு அல்ல நாம் வடக்கு கிழக்கு மலையகத்தை இனைத்து செயற்படும் அரசியல் கட்சி என்ற அடிப்படையில் அனைத்து மக்களின் நலனையும் கருத்துக்களையும் முன்னிறுத்திய நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய நிலையில் உள்ளோம் .
எமது முடிவு மக்களின் தேவைகள் உரிமைகளை முன்னிலைப்படுத்தி மக்களின் கருத்துகளுக்கமைந்ததாகவே இருக்கும் தமிழ்பொதுக்கட்டமைப்பும் வேட்பாளர் அரியநேத்திரனும் அவர்களும் எம்மை புறக்கணித்த நிலையிலும் ஐக்கிய மக்கள் சக்தி எம்மோடு பல்வேறு பேச்சுவார்த்தை நடத்தியதையும் மக்கள்நலன் சார்ந்து முன்வைக்கப்பட்ட எமது கோரிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜீத்பிரேமதாச அவர்கள் பல்வேறு விடயங்களில் சாதகமான கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது .
எது எப்படியோ ஈரோஸ் ஜனநாயக முன்னணி தமிழ் வேட்பாளர் அரியநேத்திரன் அவர்களுக்கு அதரவு தெரிவிக்கும் எந்த முடிவையும் கட்சி எடுக்கவில்லை என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்வதோடு ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கட்சியின் நிலைப்பாட்டை ஓரிரு தினங்களில் பகிரங்கமாக அறிப்போம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்