ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரமும் ட்ரான்ஷனஸ் பேரன்ஸ் இண்டநெசனல் ஸ்ரீலங்காவும் இணைந்து 50க்கும் மேற்பட்ட மும்மொழியிலான ஊடகவியலாளர்களுக்கு தேர்தல் செலவினங்களை எவ்வாறு ஒழுங்குபடுத்துதல் ?; சம்பந்தமான கருத்தரங்கொன்று 10.09.2024 கொழும்பு 7 ல் உள்ள கெக்டர் கொப்பேகடுவ விவசாய பயிற்சி ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன், தேர்தல் கண்கானிப்பின் செயற்பாட்டாளர் மன்சுல கஜநாயக்க, மற்றும் செல்வி பிரியசினி ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.
இங்கு விரிவரையாற்றிய மன்சுல கஜநாயக்கக கூறியதாவது..
இலங்கையின் தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டம்
2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டம் ஒவ்வொரு தேர்தலிலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு பொருந்தும்.
இச் சட்டத்தின் ஏற்புடமை உள்ளூராட்சித்; தேர்தல்கள், மாகாண சபைத் தேர்தல்கள், பாராளுமன்றத் தேர்தல்கள், அத்துடன் ஜனாதிபதி தேர்தல்கள். உள்ளடக்கப்படுகின்றது.
பெறப்பட்ட உதவு தொகைகளும், செலவினமும் அது பற்றிய
விபரத்திரட்டு அறிக்கை
தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட திகதியிலிருந்து 21 நாட்களுக்குள் ஒவ்வொரு
அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சி, சுயேச்சைக் குழு அல்லது வேட்பாளர்களும் தங்களது
சார்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேர்தல் செலவுகள், அனைத்து நன்கொடைகளும் அல்லது உதவு தொகைகளும் பற்றிய விபரத்திரட்டொன்றை தேர்தல் ஆணையகத்திடம் சமர்ப்பித்தல் வேண்டும்.
அதன் பின்னர், அறிக்கைகள் பெறப்பட்டதாக தேர்தல் ஆணையகம் அறிவிப்பொன்றை
வெளியிடும், அதன்படி மக்கள் அவ் அறிக்கைகளினை சரிபார்க்கலாம்.
குற்றங்கள் மற்றும் தண்டனைகள் அனுமதிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக செலவு செய்தல், தடை செய்யப்பட்ட நன்கொடைகளை ஏற்றுக்கொள்ளல், தவறான தகவல்களை பதிவேடுகளில் பதிவு செய்தல் ஆகியவை சட்ட விரோத செயல்களாகும்.
இலங்கையின் சனத்தொகை படி ஒரு ஜனாதிபதி வேட்பாளர் அதிகூடிய 186 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்ய முடியும். சுயாதீன வேட்பாளர் எனின் அவர் தனியே செலவிட முடியும். ஒர் கட்சி என்ற கட்சி 60 வீதமும் வேட்பாளர் 40 வீதம் செலவு செய்ய முடியும்.
பிரித்தானிவில் ஓர் பிரதமர் தேர்தல் வேட்பாளர் இருப்பின் அவர் அரச அலுவலகத்திற்குள் சென்று அங்கு ஒரு மெழுகுதிரியை கூட அவர் பற்றவைக்க முடியாது ஆனால் இலங்கையில் பதவியில் இருக்கும் ஜனாதிபதி சகல அதிகாரங்களை பாவிக்கும் உரிமை இருக்கின்றது. அவர் வானுர்தியும் பாவிக்கப்படுகின்றது. இலங்கையில் எதிர்காலத்தில் இச் சடம் திருத்தியமைக்கப்படல் வேண்டும்.
ஜனாதிபதி வேற்பாளர்கள் தத்தமது சொத்துரிமைப் பிரகடனத்தினை வெளிப்படுத்திவிட்டு அவர் தேர்தல் செலவினங்கள் மற்றும் கணக்கரிக்கையை சமர்ப்பித்தல் வேண்டும். அவர் மேலதிகமாக சொத்துக்கள் இருப்பின் அவர் இலங்கை இறைவரித் திணைக்களத்தில் வரி செலுத்தியுள்ளார என்பதையும் சொத்துரிமைப் பிரகடனத்தினையும் பெற்று ஊடகவியலாளர்கள் கண்கானிக்க முடியும்.
அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் மற்றும் அவர்களின் தேர்தல் பிரச்சாரங்கள் சமரசம் செய்யப்படும் போது, அது நாட்டின் நிர்வாகம் மற்றும் ஜனநாயகத்தின் தரத்தையும் நேரடியாகப் பாதிக்கின்றது. இது வேட்பாளர் போட்டி மற்றும் தேர்தலினையும் பாதிக்கின்றது.
எடுத்துக்காடடக, பல்வேறு தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் தங்களது சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் போது ரகசியமாக வழங்கப்படும்.
குறிப்பிடத்தக்க பண நன்கொடை களானது தேர்தல் செயல்முறைகளுக்கு தேவையற்ற முறையில் பாதிப்பினை ஏற்படுத்தலாம். ஆனால் தேர்தல் நடைமுறைக்கு மாத்திரம் இச்சேதம் ஏற்படுவதில்லை. அதாவது அரசியலாக்கத்திற்கும் தீங்கு விளைவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் பொது நலன்களுக்காக தங்களது சேவைகளை வழங்குவதனை விட தேர்தல் பிரச்சாரங்களுக்காகப் பணம் கொடுத்தவர்களுக்கு நன்மை செய்வதில் கவனம் செலுத்துவதனாலேயாகும்.
எனவே, தேர்தல்களில் அரசியற் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் ஏற்படுத்தப்படும் செலவுகள் மற்றும் நன்கொடைகள் வெளிப்படைத் தன்மை வாய்ந்ததாக இருத்தல் அவசியம்.
தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்துவதற்கான நோக்கங்கள் தேவையற்ற செல்வாக்கைத் தடுத்தல் – நிதி பெறும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள்
பொதுமக்கள் நலன்கள் காட்டிலும் நன்கொடையாளர்களின் நலன்களுக்காகச்
செயல்படுகின்றது.
தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் சம தளத்தை வழங்குதல் –
அரசியலுக்கு புதிய வேட்பாளர்கள், நிதி அடிப்படையில் தாழ்ந்த நிலையில் உள்ள வேட்பாளர்கள் மற்றும் நிதி பெற போராடும் குழுக்கள் போன்றவர்கள் பணக்கார வேட்பாளர்களுடன் போட்டியிட வேண்டிய நிலை காணப்படல்.
அதிகமாகச் செலவு செய்வதைத் தடுத்தல் – செலவு வரம்புகள் இல்லாத காரணங்களால் தேர்தல்களின் போது அதிகச் செலவு ஏற்படுத்துதல் மற்றும் அவையாவன வாக்குகளை வாங்குவதற்கும் வழிவகுக்கின்றன.
பொதுச் சொத்துக்களினை தவறாக பயன்படுத்தப்படுவதை தடுத்தல் – வெளிப்படைத்தன்மை இல்லையென்றால் சக்திவாய்ந்த வேட்பாளர்கள் மற்றும் அரசியற் கட்சிகள் அரசு திட்டங்கள், நிதி, அதிகாரிகள், வாகனங்கள், கட்டிடங்கள் போன்றவற்றை எளிதில் தவறாகப் பயன்படுத்தலாம்.
தேர்தல் செலவினத்தின் மீதான கட்டுப்பாடு தேர்தலை நிர்ணயித்த பின்னர், அத்தகைய தேர்தலில் போட்டியிடுகின்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் கலந்தாலோசனையின், தேர்தலுக்காக அனுமதிக்கப்பட்ட தொகையானது வர்த்தமானி ஒன்றின் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது.
ஒவ்வொரு தேர்தலுக்கும் சம்மந்தப்பட்ட தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கையை அத்தேர்தலுக்காக நிர்ணயிக்கப்படக்கூடியவாறான தொகையினால் பெருக்கப்படும்.
அத்தகைய அனுமதிக்கப்பட்ட தொகையானது அந்தத் தேர்தல் தொடர்பாக ஒரு
வேட்பாளர் செலவிடக்கூடிய அதிகபட்சத் தொகையாகும்.
நன்கொடைகளை ஏற்றுக்கொள்ளல் மீதான தடை ஒரு அரசாங்கத் திணைக்களத்திடமிருந்து, அரச நிறுவனங்கள், ஒரு பகிரங்கக் கூட்டுத்தாபனம்,
வெளிநாட்டு அரசாங்கங்கள், சர்வதேச ஒழுங்கமைப்பிடமிருந்து, 50 க்கும் அல்லது அதற்கு மேற்பட்ட அதிகமான வெளிநாட்டு உரிமையைக் கொண்ட கம்பெனிகள் மற்றும் தங்கள் அடையாளத்தை வெளிக்காட்டாதவர்கள் வழங்கும் நன்கொடைகளினை ஏற்றுக்கொள்ளுதலோ அல்லது பெறுதலோ தடை செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் செலவின ஒழுங்குமுறைகள் தொடர்பான முன்னேற்றங்கள்
புதிய சட்டத்தின் முறையான அமுல்படுத்தும் செயல்முறை ஆரம்பிக்கப்பட வேண்டும், அதற்காக மிகவும் வலுவான கண்காணிப்பு பொறிமுறைகளை உருவாக்குதல் அவசியமாகும்.
இதில், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், மற்றும் மக்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வும் புரிதலும் இருத்தல் வேண்டும்.