(நூருல் ஹுதா உமர்) தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே நாட்டை காப்பாற்ற வந்தார். நாட்டு மக்கள் வாழத் தகுந்த வகையில் நாட்டின் நிலைமையை மாற்றியமைத்தார். அதன் பயனாக இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 50 லட்சம் வாக்குகளுக்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது என முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார்.
சாய்ந்தமருதில் கல்முனைத் தொகுதி ஐ.தே.க அமைப்பாளர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் தலைமையில் நடைபெற்ற இயலும் ஸ்ரீலங்கா பிரச்சார கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
முழு நாடும் அனுரவிற்கு என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மறு முனையில் சஜித் இப்போதே ஜனாதிபதியாகி விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். இவர்கள் வேடிக்கை பாத்திரங்கள். ஆனால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முதிர்ச்சியானவர். இலங்கை வரலாற்று அதிகப்படியான வாக்குகளை பெற்று வெற்றிபெறப்போகும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே இருப்பார்.” என்றார்.
இந்நிகழ்வில் மகா சங்கத்தினர், சர்வ மதத் தலைவர்கள், அமைச்சர் அலி சப்ரி, தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா, ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி தலைவர் அன்வர் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.